Bigg boss tamil 3 today promo : பிக்பாஸ் வீட்டில் மோகன் வைத்யாவால் தர்ஷன் அழுதது, வனிதா விஜயகுமாரின் சோக கீதம் இவையே, இன்றைய தினம் ஒளிபரப்பாக உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியில் நம் மனதை கரைக்க உள்ளது.
பிக்பாஸ் 3 சீசன் வெற்றிகரமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு சீசன்களையும் தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசனே இந்த சீசனையும் தொகுத்து வழங்கிவருகிறார். என்ன, இந்த சீசனில் கமலின் பேச்சில் கொஞ்சம் அரசியல் நெடி அதிகமாகவே வீசுகிறது.
முதல் இரண்டு சீசன்களில் சிலப்பல தினங்களுக்கு பிறகு தான் சண்டை என்ற கட்டம் வரும். இந்த சீசனில் ஏனோ, 3வது சீசன் துவங்கிய 3வது நாளிலேயே சென்டிமென்ட், சண்டை என ஆட்டம் களைகட்ட துவங்கியுள்ளது.
பிக் பாஸ் 3 வீட்டில் மற்றவர்களை மிரட்டும் வனிதா விஜயகுமாரையே ஃபீல் பண்ணி அழ வைத்துவிட்டார்கள். பிக் பாஸ் 3 வீட்டில் இன்று இரவு ஒரே அழுகாச்சியாகத் தான் இருக்கும் போன்று. இன்று வெளியாகியுள்ள புரோமோ வீடியோக்களிலுமே போட்டியாளர்கள் அழுது கொண்டிருக்கிறார்கள்.
கடைசி ப்ரொமோ வீடியோவில் சொர்ணாக்கா என்று அழைக்கப்படும் வனிதா விஜயகுமார் அழுகிறார். வனிதா வாழ்க்கையில் மறக்க முடியாத நாள் என் மகன் விஜய ஸ்ரீஹரி பிறந்தநாள் என்று கூறி அழுகிறார். அம்மா அல்லது குழந்தையை தான் காப்பாற்ற முடியும் என்றார்கள். அவனை என்னிடம் கொண்டு வந்தபோது எனக்கு வாழ்க்கையில் யாருமே நிரந்தரமாக இல்லை நீ என்னை விட்டுட மாட்டாய் அல்லவா என்று கேட்டதும் அவன் என் கையை பிடித்தான், நான் அழுதுவிட்டேன் என்று வனிதா தெரிவித்துள்ளார்.
மற்றொரு புரோமோ வீடியோவில், மோகன் வைத்யா கடுமையாக பேசியதும் தர்ஷன் அழுததை பார்த்த ரசிகர்கள் ஃபீல் பண்ணினார்கள். ஆனால் வனிதா அழுததை பார்த்து யாருக்கும் கண்ணீர் வரவில்லை. பிக் பாஸ் 3 வீட்டிற்கு வந்த வேகத்தில் பலரின் வெறுப்பை சம்பாதித்துவிட்டார் வனிதா. அதனால் அவர் அழுவதை பார்த்து ரசிகர்கள் சிரிக்கும்படியாகிவிட்டது. பிக் பாஸ் மகன் விஜய ஸ்ரீஹரி தன்னை புரிந்து கொண்டு மீண்டும் தன்னிடம் வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளதாக வனிதா விஜயகுமார் முதல் நாள் தெரிவித்தார். அவர் பிக் பாஸ் வீட்டில் நடந்து கொள்ளும் விதத்தை பார்த்தால் மகனுக்கு அவர் மீது மேலும் கோபம் ஏற்படும்போல...
பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் ஒருவர் மாற்றி ஒருவர் அழுது கொண்டே இருக்கிறார்கள். இப்படி பிக் பாஸ் வீடு சோக வீடாக இருப்பது ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. முதல் நாளே காதல் காட்சி வைத்த பிக் பாஸா, இப்படி சோக கீதம் பாட வைப்பது என்று பார்வையாளர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர்.