புது போட்டியாளர்கள்… புதிய பிரச்சனைகள்… பிக்பாஸ் 5-வது சீசன் அறிவிப்பு எப்போது?
BIGGBOSS kamal haasan latest Tamil News: கோலாகலமாக துவங்கவுள்ள பிக் பாஸ் சீசன் -5 புது லோகோ, புது வீடு, புது போட்டியாளர்கள், புதுப்புது பிரச்சனைகள் என கலைகட்ட உள்ளது.
bigg boss 5 tamil news: விஜய் டிவியில் கடந்த 2017ம் ஆண்டு முதல் ஒளிபரப்பப்பட்டு வரும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான். ஆனாலும், கமல் முழு நேர அரசியலில் ஈடுபட்டுள்ளதால் இந்த ஆண்டு நடக்கும் பிக் பாஸ் சீசன் 5-க்கு வரமாட்டார் என்ற பேச்சு அடிபட்டது. இதனால் நிகழ்ச்சியை நடத்தும் குழு நடிகர் கமலுக்கு பதில் சிம்பு உள்ளிட்ட வேறு சில நடிகர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வந்தது.
Advertisment
இந்நிலையில், ‘பிக் பாஸ் ஷோவுக்காக கமல் ஒரு பெரிய தொகையை அட்வான்ஸாக வாங்கினார். அதை நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்காக பயன்படுத்திவிட்டார்' என கமலின் மக்கள் நீதி மய்யத்திலிருந்து விலகிய பிரபலம் ஒருவர் தெரிவித்து இருந்தார். எனவே கமல் நிச்சயம் பிக் பாஸ் சீசன் 5- யை தொகுத்து வழங்குவார் என்பது உறுதியாகியுள்ளது.
இருப்பினும், இந்த தகவல் உறுதி செய்யப்பட்டு தற்போது 2 மாதங்களுக்கு மேல் ஆகியும் ஷோ துவங்குவதற்கான எந்த அறிகுறியும் இல்லை என சமூக வலைத்தளங்களில் ரசிர்கள் விவாதித்து வருகின்றனர். மேலும் கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக கடந்த ஆண்டு தாமதமாக நடத்தப்பட்ட இந்த ஷோ இந்த ஆண்டும் தாமதமாக நடத்தப்பட வாய்ப்புள்ளோதோ என்பது போன்ற கேள்வியையும் எழுப்பி வருகின்றனர்.
Advertisment
Advertisements
ரசிகர்கள் நினைப்பது போலவே இந்தியாவில் உருவெடுத்துள்ள கொரோனா 2ம் அலையால் பிக்பாஸ் சீசன் - 5 கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் அக்டோபர் மாதத்தில் ஒளிபரப்பு தொடங்கும் என கூறப்படுகிறது. இதற்கான முதற்கட்ட பணிகள் நடந்து வருகிறது என்றும், சில நடிகர்கள் பிக் பாஸ் செல்வது உறுதியாகியுள்ளது என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த ஷோ குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இந்த மாத இறுதியில் வரலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோலாகலமாக துவங்கவுள்ள இந்த ஆண்டு பிக் பாஸ் (சீசன் -5) புது லோகோ, புது வீடு, புது போட்டியாளர்கள், புதுப்புது பிரச்சனைகள் என கலைகட்ட உள்ளது. எனவே சுவாரஷ்யங்களுக்கு பஞ்சமிருக்காது.