பிக் பாஸ் சீசன் 5: இந்த முறை ‘கம்பெனி ஆர்டிஸ்ட்’களுக்கு இடம் கிடையாதாம்!

Serial actress pavani reddy may participate in BIGGBOSS season 5 Tamil News: சீரியல்களில் கலக்கி வரும் நடிகை பவானி ரெட்டி பிக்பாஸ் சீசன் 5ல் பங்கேற்க உள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில், விஜய் டிவி ஆர்டிஸ்ட்களுக்கு பிக்பாஸ் வீட்டில் இடம் இல்லை என கூறப்படுகிறது.

BIGGBOSS 5 latest Tamil News: pavani reddy may participate bb s5 Tamil News

pavani reddy latest Tamil News:  சின்னத்திரையில் மிக பிரபலமான சீரியல் தொடர்களான ரெட்டைவால் குருவி, சின்னதம்பி, மற்றும் ராசாத்தி ஆகிய சீரியல் மூலம் பெரும் ரசிகர் பட்டாளத்தை பெற்றவர் நடிகை பவானி ரெட்டி. இவர் முதலில் அறிமுகமாகியது தெலுங்கு சினிமாவில் தான். விஜய் டிவி-யில் ஒளிபரப்பான ‘சின்னத்தம்பி’ சீரியலில் நந்தினியாக நடித்து ரசிகர்களின் பேராதரவைப் பெற்றிருந்தார். எனவே இவருக்கு கிராமப்புறங்களிலும் மவுசு அதிகரித்திருந்தது. அதனைத் தொடர்ந்து சன் டிவி-யின் ராசாத்தி சீரியலிலும் கிராமத்து பெண்ணாக நடித்திருந்தார்.

நடிகை பவானி ரெட்டி சக சீரியல் நடிகரான பிரதீப்பை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவரது துரதிர்ஷ்டவசமோ என்னவோ கணவர் ஒரு வருடத்திலேயே தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்போது பவானி தனது உறவினர் ஒருவரை இரண்டாம் திருமணம் செய்து கொள்ளப் போவதாக செய்திகள் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

சின்னத்திரை சீரியல்களில் கலக்கி வரும் பவானி தமிழில் வெள்ளித்திரையிலும் தோன்றியுள்ளார். ‘இனி அவனே’ என்ற படத்தில் தான் இவர் நடித்துள்ளார். ஆபாசக் காட்சிகளில் நடித்துள்ள இவரின் இந்த வீடியோ சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.

இந்நிலையில், கொரோனா காரணமாக இந்த ஆண்டும் தாமதமாக துவங்கவுள்ள பிக்பாஸ் சீசன் 5ல் நடிகை பவானி ரெட்டி பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நிகழ்ச்சியில் பங்கேற்பது குறித்து நிகழ்ச்சி குழு அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தியதாகவும் அதற்கு பவானி ரெட்டி ஒப்புதல் தெரிவித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

எனினும், கட்டுப்பாட்டு விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ள பிக்பாஸ் சீசன் 5ல் விஜய் டிவி பிரபலங்கள் பங்கேற்க வாய்ப்பில்லை என சின்னத்திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்நிகழ்ச்சியில் பங்கேற்பது தொடர்பாக 30 பிரபலங்களிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது என்றும் கூறப்படுகிறது.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Biggboss 5 latest tamil news pavani reddy may participate bb s5 tamil news

Next Story
ராஜா ராணி சீரியல் நடிகைக்கு கல்யாணம்: மாப்பிள்ளை யாரு?anshu reddy engagements, serial actress anshu reddy engaged, actress anshu reddy with sowmith reddy, அன்ஷு ரெட்டி, நடிகை அன்ஷு ரெட்டி நிச்சதார்த்தம், அன்ஷு ரெட்டி திருமணம், ராஜா ராணி சீரியல் நடிகை அன்ஷு ரெட்டி கல்யாணம், சௌமித் ரெட்டி, raja rani serial actress anshu reddy gets engagements, tamil entertainments
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com