biggboss 5 tamil latest update: சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளுள் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியும் ஒன்று. கடந்த 2017ம் ஆண்டு முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டு வரும் இந்த ரியாலிட்டி ஷோவை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியை முதன் முதலில் தமிழில் லாஞ் செய்த போது பல எதிர்மறையான கருத்துக்கள் வெளியாகின. ஆனால், தற்போது வரை ரசிகர்களின் ஆதரவை பெற்றுவரும் ஒரே ஷோவாக பிக்பாஸ் இருக்கிறது.

இந்த நிகழ்ச்சிக்கான 5 -வது சீசன் கொரோனா காரணங்களால் தாமதப்படுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது, வழக்கம் போல் சென்னையில் உள்ள இவிபி ஸ்டூடியோவில் ஒரு பிரம்மாண்ட வீடு செட் அமைக்கப்பட்டு, இறுதிக்கட்ட பணிகள் சுறுசுறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. மேலும், பிக்பாஸ் அப்டேட் குறித்து ரசிகர்கள் ஆவலாய் இருந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி வெளியாகிய ப்ரோமோ வீடியோ அவர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

தவிர, நிகழ்ச்சி குழு தற்போது வரை 2 ப்ரோமோ வீடியோக்களை வெளியிட்டுள்ளது. இன்னும் சில புரொமோக்கள் வார இறுதியில் வெளி வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதோடு, அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்துள்ள பிக் பாஸ் சீசன் 5 அக்டோபர் இறுதி வாரத்தில் ஒளிபரப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இது ஒருபுறமிருக்க, பிக் பாஸ் சீசன் 5ல் கலந்து கொள்ள உள்ள போட்டியாளர்கள் குறித்த உத்தேச பட்டியல் ஒன்று தினந்தோறும் இணைய பக்கங்களில் வலம் வந்த வண்ணம் உள்ளன. இதில் குக் வித் கோமாளி கனி, சுனிதா, பாபா பாஸ்கர், சார்பட்டா பரம்பரை புகழ் ஜான் விஜய், நடிகைகள் ரம்யா கிருஷ்ணன், மைனா நந்தினி, செய்தி வாசிப்பாளர் கண்மணி, எம்.எஸ்.பாஸ்கர், லட்சுமி ராமகிருஷ்ணன், டிக்டாக் ஜி.பி.முத்து மற்றும் ஷகீலாவின் மகள் மிளா ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன.
இருப்பினும், பட்டியலில் இடம்பெற்றுள்ள பிரபலங்கள் தாங்கள் பிக் பாஸ் சீசன் 5ல் பங்கேற்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இதுவரை வெளியிடவில்லை. இந்நிலையில், கோபிநாத் ரவி என்ற மாடல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார் என்ற தகவல் கடந்த வாரத்தில் வெளியாகியது. ஆனால், இது குறித்த தகவல் ஏதும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்படும் செம்பருத்தி சீரியலில் முக்கிய ரோலில் நடிக்கும் பிரியா ராமன் பிக் பாஸில் போட்டியாளராக களம் காண உள்ளார் என்கிற செய்தி வெளியாகியுள்ளது. மேலும், செம்பருத்தி சீரியலில் இருந்து அவர் வெளியேறி பிக்பாஸ் 5ல் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil