நாடியா ஹஸ்பன்டை கட்டிப் பிடித்து… இந்த அளவுக்கு போகவேண்டுமா பிரியங்கா?

bigg boss 5 tamil priyanka deshpande and Nadia Chang latest news: பிக்பாஸ் வீட்டில், மலேசிய மாடல் ‘நாடியா சங்’ கணவர் குறித்து பிரியங்கா பேசியது பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் தற்போது முகசுளிப்பை ஏற்படுத்தியிருப்பதோடு எரிச்சலடைய செய்திருக்கிறது.

Biggboss 5 Tamil News: bb 5 contestent priyanka wants kiss Nadia Chang husband

Nadia Chang Tamil News: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சி தொடங்கி 2 வாரங்களே ஆனா நிலையில் நிகழ்ச்சியில் பல திருப்பங்கள் அரங்கேறியுள்ளன. கடந்த வாரத்தில் திருநங்கை நமீதா மாரிமுத்து நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். இதனால் 17 போட்டியாளர்கள் வீட்டிற்குள் இருந்தனர்.

இந்நிலையில், நேற்று ஞாயிற்றுக் கிழமை பிக்பாஸ் வீட்டில் முதல் நாமினேஷன் புராசஸ் நடைபெற்றது. இதில் மலேசியாவைச் சேர்ந்த மாடல் அழகியான ‘நாடியா சங்’ பிக்பாஸ் வீட்டில் இருந்து முதல் நபராக வெளியேற்றப்பட்டார். நாடியா சங் வெளியேற்றப்பட்டதை விட அவர் கணவர் குறித்து நிகழ்ச்சி தொகுப்பாளினியும் சக போட்டியாளருமான பிரியங்கா கூறியது தற்போது பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் எரிச்சலை கிளப்பியுள்ளது.

நாடியா சங் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படும் முன் அவர் பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் ஸ்டோரி டாஸ்க்கில் கூறிய கதை குறித்து கமல் பேசினார். அதில் நாடியா சங்கின் அவரது கணவரை புகழ்ந்திருந்தார். மேலும் அவர் தனது கதையை கூறும் போது, “நாடியா சங்கை அனைவருக்கும் தெரியும். ஆனால் சங்கை யாருக்கும் தெரியாது. நான் இங்கு நிற்கிறேன் என்றால் அதற்கு என் கணவர் சங்தான் காரணம். அவரை திருமணம் செய்த பிறகு தான் என் கனவுகள் நனவானது” என்று கூறியிருந்தார்.

நேற்றைய எபிசோடில் இதனை நினைவு கூர்ந்த கமல், உங்கள் கணவரை ஹீரோவாக்கி விட்டீர்கள். அவரது பெயர் பேக்கிரவுண்ட் மியூஸிக் போல் உள்ளது என்றார். தொடர்ந்து, சா..சங் என பேக் கிரவுண்ட் மியூஸிக்கையும் தனது வாயால் இசைத்து காட்டி பாராட்டினார் கமல்.

பின்னர், நாடியா கூறிய கதை குறித்து சகபோட்டியாளரான பிரியங்காவிடம் கமல் கேட்டபோது, “நாடியாவின் கதையை கேட்ட பிறகு அவரது கணவர் சங்கை நேரில் பார்த்து கட்டிப்பிடித்து கிஸ் அடிக்க வேண்டும் போல் இருந்தது என்று பிரியங்கா கூறினார். இதைக் கேட்ட ரசிகர்கள் முகம் சுளித்ததோடு எரிச்சல் அடைந்தனர்.

தற்போது சமூக வலைதள பக்கங்களில் அதை வெளிப்படுத்தி வரும் ரசிகர்கள், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரியங்காவை ஆரம்பத்தில் தாங்கள் விரும்பியதாகவும், தற்போது அவரின் பிஹேவியர் மிகவும் எரிச்சலை ஏற்படுத்துகிறது என்றும், அடுத்தவர் விஷயத்தில் அதிகம் தலையிடுகிறார் என்றும் விளாசி வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Biggboss 5 tamil news bb 5 contestent priyanka wants kiss nadia chang husband

Next Story
யூடியூப் வியூஸ்: அண்ணாத்த-யை பின்னுக்கு தள்ளிய ஜெய் பீம்!Surya's Jaibhim movie teaser, Jaibhim teaser, Surya, Jaibhim teaser views crossed Annaatthe movie teaser, ரஜினியின் அண்ணாத்த, ரஜினிகாந்த், சூர்யாவின் ஜெய்பீம், ஜெய்பீம் டீசர், அண்ணாத்த டீசர், Rajinikanth's Annaatthe teaser, Annaatthe teaser, tamil cinema news, Rajinikanth, Surya
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com