biggboss season 5 tamil: சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளுள் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியும் ஒன்று. கடந்த 2017ம் ஆண்டு முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டு வரும் இந்த ரியாலிட்டி ஷோவை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியை முதன் முதலில் தமிழில் லாஞ் செய்த போது பல எதிர்மறையான கருத்துக்கள் வெளியாகின. ஆனால், தற்போது வரை ரசிகர்களின் ஆதரவை பெற்றுவரும் ஒரே ஷோவாக பிக்பாஸ் இருக்கிறது.
Advertisment
இந்த நிகழ்ச்சிக்கான 5 -வது சீசன் கொரோனா காரணங்களால் தாமதப்படுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது தற்போது அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்க இருக்கிறது. எனவே, நிகழ்ச்சியில் யாரெல்லாம் போட்டியாளராக களமிறங்க உள்ளார்கள் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. தவிர, வார இறுதியில் வெளியாகி வரும் பிக் பாஸ் 5ம் சீசனுக்கான ப்ரோமோ வீடியோக்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
Advertisment
Advertisements
விஜய் டிவி இதுவரை 2 ப்ரோமோ வீடியோக்களை வெளியிட்டுள்ள நிலையில், நேற்று மாலை 5.55 மணிக்கு புது ப்ரோமோ வீடியோவை வெளியிடும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஏனென்றால், முன்பு வெளியான 2 ப்ரோமோக்களுக்கு 5.55 என குறிப்பிட்டு ப்ரோமோ பற்றிய ஹின்ட் கொடுத்து வந்தது விஜய் டிவி.
இந்நிலையில், நேற்று மீண்டும் விஜய் டிவி அதன் இன்ஸ்டா பக்கத்தில் 5.55 என குறிப்பிட்டு இருந்தது. இதனால், புது ப்ரோமோ வர போகிறதோ என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் "ஒண்ணுமில்லை.. சும்மா lololaaiக்கி" என அந்த பதிவில் குறிப்பிட்டு அனைவருக்கும் ஏமாற்றம் கொடுத்தது விஜய் டிவி.
இதை பார்த்த நெட்டிசன்கள் விஜய் டிவி அட்மினை மோசமாக திட்டி வருவதோடு, படுமோசமாக கலாய்த்து வருகின்றனர். அதோடு 'என்ன இப்படி எறங்கிட்டீங்க 'என ட்ரோல் செய்தும் வருக்கின்றனர்.