BiggBoss Archana YouTube Channel Bathroom Video Issue News : சின்னத்திரை நட்சத்திரங்களின் யூடியூப் சேனல்கள் தான் தற்போதைய நாள்களின் சோடியல் மீடியா ட்ரெண்டிங்கில் முன்னனியில் உள்ளன. பிரபலங்கள் பலரும் தங்களது அழகு ரகசியங்கள் முதல் மாடித் தோட்டம் வரை, அவர்களது வாழ்வியலை வீடியோவாக யூடியூபில் பதிவிட்டு வருகின்றனர்.
சற்று வித்தியாசமான கான்செப்ட்டுடன் யூடியூபில் களம் இறங்கியவர் பிக்பாஸ் அர்ச்சனா. ஜீ தமிழ் தொலைக்காட்சியின் பிரபல தொகுப்பாளராக வலம் வந்த அர்ச்சனா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பாளராக கலந்துக் கொண்டார். அதன்பின், சின்னத்திரையில் அதிகம் தலைக்காட்டாமல் இருந்தார். கொரோனா காலம் என்பதால், வீட்டிற்குள் முடங்கு கிடக்கும் சூழல் ஏற்படவே, ‘வாவ் லைஃப்’ என்ற யூடியூப் சேனைலை சில மாதங்களுக்கு முன் தொடங்கினார். தனது வீட்டின் ஒவ்வொரு அறையின் தோற்றத்தையும், வடிவமைப்பையும், அதில் இடம்பெற்றுள்ள பொருள்கள் என அனைத்தையும் தனித்தனியான வீடியோ மூலமாக ரசிகர்களுக்கு காண்பித்து வந்தார். அந்த வகையில், சில தினங்களுக்கு முன்பு, தனது வீட்டின் கழிப்பறையையும் வீடியோவாக பதிவிட்டார்.
வீடியோவில், மகள் சாராவுடன் தங்கள் வீட்டின் கழிப்பறையில் சுகாதாரம் எந்த அளவுக்கு பேணப்பட்டு வருகிறது என்பதை விளக்கி உள்ளனர். இறுதியாக, கழிப்பறையை சுத்தமாக வைத்திருப்பதற்காக சாராவுக்கு அர்ச்சனா பரிசினை வழங்குகிறார். இந்த நிலையில், இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் உள்ளது. ஒரு புறம் ஆதரவு, மறு பறம் எதிர்ப்பு என ‘வாவ் லைஃப்’ ஒரே வைரல்!
அர்ச்சனாவின் பாத்ரூம் வீடியோவுக்கு ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் லைட் போட, சுமார் 30 ஆயிரம் பேர் வீடியோ தங்களுக்கு பிடிக்கவில்லை என்பதற்காக டிஸ்லைக் பட்டனை அழுத்தி உள்ளனர். சிலர், தங்களுக்கு ஏன் இந்த வீடியோ பிடிக்கவில்லை என்பதையும் கமெண்டாக பதிவிட்டுள்ளனர்.
‘அடுத்தவங்க பாத்ரூம்ம எட்டிப் பாக்குறதுல்ல எவ்வளவு ஆர்வம் நம்ம மக்களுக்கு’, ‘பிரபலம் ஆக இன்னும் என்னவெல்லாம் செய்வீர்கள்?’ ‘அட பாத்ரூமையும் விட்டுவைக்கலையா’ என நெட்டிசன்கள் கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
நெட்டிசன்களின் கமெண்டுகளுக்கு கடுப்பாகாத அர்ச்சனா, ‘யார் என்ன பேசினாலும், நாங்க தான் ட்ரெண்டிங் நம்பர் 1 என தனது அடக்கமான பாணியில் இன்ஸ்டாகிராம் பதிவில் பதிலடி அளித்துள்ளார்.இந்த பதிவும் வைரலாக, 2 மில்லியன் பேருக்கு மேல் பார்த்த வீடியோவாக அர்ச்சனாவின் பாத்ரூம் வீடியோ சமூக வலைதளங்களில் வலம் வந்த வண்ணம் உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil