2012-ம் ஆண்டு வெளியான லாகின் என்ற பாலிவுட் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் பாவனி ரெட்டி. அதன்பிறகு தமிழ் தெலுங்கில் சில படங்களில் நடித்த அவர், 2015-ம் ஆண்டு விஜய் டிவியின் ரெட்டை வால் குருவி சீரியலில் நடித்து பிரபலமானார். அதே ஆண்டு சன் டிவி தொடரான ’பாசமலர்’ தொடரில் நாயகியாக நடித்தார்.
‘பாசமலர்’ சீரியலில் நடித்தபோது பவனி ரெட்டியும் தெலுங்கு நடிகர் பிரதீப் குமாரும் காதலித்த நிலையில், 2017 ஆம் ஆண்டு காதலர் தினத்தன்று காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆனால் அடுத்த 3 மாதங்களில் (மே 2017) பிரதீப் தற்கொலை செய்து கொண்டார். அதன் பிறகு மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்ட பாவனி ரெட்டி அதில் இருந்து சில ஆண்டுகளுக்கு பிறகு அதில் இருந்து மீண்டுவந்தார்.
இதனிடையே கடந்த ஆண்டு நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனில் போட்டியாளாக பங்கேற்றார். நிகழ்ச்சியில் நடன இயக்குனரான அமீர் பாவனியுடன் நெருங்கி பழகிய நிலையில், இருவரும் காதலிப்பதாக கூறப்பட்டது. மேலும் அமீரும் பாவனியிடம் லவ் ப்ரபோஸ் செய்துகொண்டிருந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இருவரும் ‘பிபி ஜோடிகள் சீசன் 2’ இல் ஜோடியாக களமிறங்கினர்.
இதில் சிறப்பாக விளையாடிய இவர்கள் இருவரும் ‘பிபி ஜோடிகள் 2’ என்ற டைட்டிலை வென்றனர், அதன் பிறகு அவர்கள் உண்மையில் டேட்டிங்கில் இருப்பதாகவும், பாவனி அமீரின் பிரபோசலை ஏற்றுக்கொண்டதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் சமீபத்திய தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடிகையிடம், கடந்த காலத்திலிருந்து தற்போதைய வாழ்க்கையில் நீங்கள் விரும்பும் ஒன்று என்ன என்று கேட்கப்பட்டது.

இதற்கு பதில் அளித்த பாவனி சற்றும் தயக்கம் இன்றி, மறைந்த கணவர் திரும்பி வர வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என்றும் அவர் இப்போது உயிருடன் இருக்க வேண்டும் என்று நினைப்பதாகவும் பவானி பதில் அளித்துள்ளார். அதே சமயம் அமீர் தனது 2-வது கணவர் என்று தன் பதிலை எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் எச்சரித்துள்ளார். 34 வயதான பாவனி தற்போது அமீருடன் மகிழ்ச்சியான சூழலில் இருப்பதாகவும், தனது வாழ்க்கையில் நடந்த சிறந்த விஷயம் என்றும் கூறினார்.
இவரின் பதில் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அவரது வெளிப்படையான தன்மை மற்றும் மறைந்த கணவரிடம் அவர் வைத்திருக்கும் அன்பு அனைத்தும் ஆச்சரியப்பட வைப்பதாகவும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பவானி தற்போது தெலுங்கில் ‘மல்லி மொடலைண்டி’ மற்றும் ‘குடும்ப மேட்டர்’ ஆகிய இரண்டு படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். அமீர் கதாநாயகனாக நடிக்கும் புதிய தமிழ்/தெலுங்கு திரைப்படத்திலும் நடிக்க அவரிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil