/tamil-ie/media/media_files/uploads/2019/07/template-50-1.jpg)
biggboss 3 tamil, kamalhassan, chinmayi, saravanan, meera mithun, twitter, vijay tv, பிக்பாஸ் 3, கமல்ஹாசன், சின்மயி, சரவணன், சேரன், லாஸ்லியா, மீரா மிதுன், டுவிட்டர், விஜய் டிவி
பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் இதுவரை எந்த ஒரு சர்ச்சையில் சிக்காமல் இருந்தது சரவணன் தான். தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவரான சரவணன் தற்போது பிக் நடிகர்களில் நிகழ்ச்சியில் பங்குபெற்று வருகிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய (ஜூலை 27ம் தேதி) எபிசோடில் கமல், சேரன் மற்றும் மீராவின் பஞ்சாயத்து குறித்து பேசிக்கொண்டிருந்தார். மீரா, சேரன் தன்னை தவறாக தொட்டார் என்று சொல்லியதால் அவருக்கு குறும்படம் ஒன்றை போட்டுக்காண்பித்தார் கமல். மேலும், அந்த குறும்படம் மூலம் சேரன் எந்த தவறும் செய்யவில்லை என்பதை உறுதி செய்தார் கமல். மேலும், மீராவிற்கு அறிவுரை வழங்கிய கமல், நீங்கள் இப்படியெல்லாம் அறிவுரை எல்லாம் வைத்தால், நீங்கள் பேருந்தில் எல்லாம் போகவே முடியாது.
அதில் பெண்களை உரசுவதற்கு என்றே சிலர் வருவார்கள் என்று கூறினார். இதற்கு சரவணன் ‘நானும் காலேஜ் படிக்கும் போது செஞ்சி இருக்கேன் சார்’ என்று கூறினார். இந்த விடியோவை பிரபல பாடகி சின்மயிக்கு டுவிட்டரில் ஒருவர் பகிர்ந்துள்ளார்.
A Tamil channel aired a man proudly proclaiming he used the Public Bus Transport system to molest/grope women - to cheers from the audience.
And this is a joke. To the audience. To the women clapping. To the molester.
Damn. https://t.co/kaL7PMDw4u
— Chinmayi Sripaada (@Chinmayi) July 27, 2019
இந்த விடியோவை கண்ட சின்மயி, பேருந்தில் பெண்களை உரசுவதாக கூறும் ஒரு நபரின் பேச்சை பிரபல தொலைக்காட்சியில் பெருமையுடன் ஒளிபரப்புகிறது அதனை ரசிகர்களும் கைத்தட்டி ஆதரவளிக்கின்றனர். இது என்ன விளையாட்டா? பெண்களிடம் தவறாக நடப்பவர்களை கண்டு ரசிகர்கள் கைதட்டுவார்களா என்று பதிவிட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.