/indian-express-tamil/media/media_files/2025/10/06/akori-2025-10-06-18-34-42.jpg)
தமிழில் மிக பிரமாண்டமாக பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதில் அகோரி கலையரசனும் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். பொதுவாக பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் வந்து ஒரு இரண்டு நாட்களுக்கு பிறகே கொஞ்சம் கொஞ்சமாக தனது சுயரூபத்தை காண்பிப்பார்கள்.
ஆனால், கெமி வந்த முதல் நாளே தனது ஆட்டத்தை ஆரம்பித்துவிட்டார். முதலில் பிக்பாஸ் வீட்டில் நுழைந்ததும் மருத்துவர் திவாகருடன் சண்டை போட்டார். அதன்பின்னர், நடிகர் கம்ருதீன் உடன் சண்டை போட்டார். இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் வந்ததுமே ஆட்டத்தை ஆரம்பித்துவிட்டார் கெமி என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் அகோரி கலையரசன் போட்டியாளராக பங்கேற்றுள்ளது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் போடி புதுக்காலனி அன்னை இந்திரா ஆதரவற்றோர் இல்லத்தில் வாழ்ந்து வந்தவர் கலையரசன். இவர் இங்குள்ள சந்தனமாரியம்மன் ஆசியால் அருள்வாக்கு கூறும் சித்தராக மாறி தற்போது அகோரி சாமியாராக உருவெடுத்துள்ளார். காசிக்கு சென்று அங்குள்ள பெரியவர்களிடம் தீட்சை பெற்று அகோரியாக மாறியதாக அவர் கூறியுள்ளார்.
சமீபத்தில் அகோரி கலையரசன் குறித்து தான் சமூக வலைதளத்தில் பேசப்பட்டது. அது இவரது திறமைக்காக அல்ல இவரது குடும்ப பிரச்சனைகளுக்காக அகோரி கலையரசன் மற்றும் அவரது மனைவி இருவரும் இன்ஸ்டாவில் அடிக்கடி ரீல்ஸ் செய்து வீடியோ வெளியிட்டு வந்தனர். இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக பெரும் பிரச்சனை ஏற்பட்டது. இந்த பிரச்சனை சமூக வலைதளம் முழுவதும் திறந்த புத்தகமாக மாறியது.
இவர்கள் இருவரும் சில வருடங்களுக்கு முன்பு பிரிந்ததாகச் சொல்லப்பட்டது. ஆனால், சில மாதங்களுக்கு பிறகு இருவரும் மீண்டும் சேர்ந்து விட்டனர். மீண்டும் சேர்ந்த பிறகும்கூட, நிலைமை சீராகவில்லை. கடந்த வருடத்தில், கலையரசனின் மனைவி, "தன் கணவர் கடவுளுக்குச் சமம்" என்று புகழ்ந்து பேசிய வீடியோக்கள் இணையத்தில் இருந்தன. ஆனால், அதன் அடுத்த சில மாதங்களிலேயே நிலைமை தலைகீழானது. கலையரசனின் மனைவி அவர் மீது பல குற்றச்சாட்டுகளை பொதுவெளியில் முன்வைத்தார். இப்படி இவரது குடும்ப பிரச்சனைகள் சமூக வலைதளத்தில் ட்ரெண்டிங்கில் இருந்தது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.