சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சந்திரலேகா சீரியலின் மூலம், சின்னத்திரையில் அறிமுகம் ஆகிறார் பிக்பாஸ் வனிதா விஜயகுமார். வனிதா, வெள்ளித்திரையில் சந்திரலேகா திரைப்படத்தின் மூலமே அறிமுகமாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
பிக் பாஸ் சீசன் 3 யின் பரபரப்பு ஹவுஸ்மேட்டாக இருந்தவர் நடிகை வனிதா விஜயகுமார். இவர் இல்லாமல் இருந்திருந்தால், பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி, உண்மையிலேயே அவ்வளவு களைகட்டி இருக்காது என்பதை யாராலும் மறுக்க இயலாது.
வனிதாவுக்கு சினிமா வரவேற்பு கொடுப்பதற்குள் சின்னத்திரை வரவேற்பு கொடுத்து இருக்கிறது. விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் வில்லியாக நடிக்கப் போவதாக முதலில் செய்திகள் வந்தன. அதற்குள் முந்திக் கொண்டது சன் டிவி. தினமும் திங்கள் முதல் சனி வரை பிற்பகல் 2 மணிக்கு ஒளிபரப்பாகும் சன் டிவியின் சந்திரலேகா சீரியலில் வனிதா நடிக்க உள்ளார்.
5 வருசத்துக்கும் மேலாக சன் டிவியில் சந்திரலேகா சீரியல் பிற்பகலில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில்தான் நடிக்க உள்ளார் வனிதா விஜயகுமார். மேம் எவ்வளவோ பிரச்னையை பார்த்துட்டீங்க.இப்போ என்ன பிரச்சனைன்னு கேட்கறாங்க... இப்போ சந்திரா வீட்டுக்கு போகப்போறோம்னு சொல்றாங்க.,அங்கே என்ன பிரச்சனைன்னு கேட்க, இனிமேல்தான் பிரச்சனை என்று சொல்கிறார் வனிதா. அதாவது சந்திரலேகா சீரியலில் வனிதா நடிக்கப் போகிறார். கெஸ்ட் ரோலா நிரந்தரமான ரோலான்னு இனிதான் தெரிய வரும்.
சந்திரலேகா சீரியலில் தான் நடிக்க இருப்பதை, வனிதா விஜயகுமார், டுவிட்டரில் 2 புரோமோ வீடியோக்களை வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளார்.