பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்டிபெண்டன்ட் இசையமைப்பாளராக உள்ளே வந்த அசல் கொலார் நடந்துகொள்ளும் விதம் அருவருப்பாக உள்ளதாக நடிகை வனிதா விஜயகுமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.
விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இந்த நிகழ்ச்சியில் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ந் தேதி தொடங்கப்பட்டது. வழக்கத்திற்கு மாறாக நிறைய புதுமுகங்கள் பங்கேற்றுள்ள இந்நிகழ்ச்சியில், முதல்நாளில் இருந்தே ஒரு சில போட்டியாளர்கள் ரசிகர்களை குஷிப்படுத்தி வந்தனர். இதில் முக்கியமானவர் ஜி.பி.முத்து. ஆனால் தனது மகனுக்கு உடல் நிலை சரியில்லாததால் அவர் நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியேறினார்.
இதனைத் தொடர்ந்து தற்போது அசீம், நடந்துகொள்ளும் விதம் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வரும் நிலையில், அசல் கொலார் பெண்களிடம் நடந்துகொள்ளும் வித அருவருப்பாக உள்ளதாக நடிகை வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார். வசந்தகுமார் என்ற பெரை அசல் கொலார் என்று மாற்றிக்கொண்டு தனது இசை மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானர். தொடர்ந்து யுவன் மற்றும் சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்களை எழுதியுள்ளார்.

தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள அசல் கொலார், தொடக்கத்தில் இருந்தே பெண்களிடம் பேசுவது சக போட்டியாளர்கள் மட்டுமல்லாது ரசிகர்களுக்கு பிடிக்காமல் இருக்கிறது. இதில் நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளே ரவுடிபேபி ஆயிஷாவிடம் தன்னை வாடா போடா என்று சொல்லக்கூடாது என்று சொல்லி அவரை வம்பிழுத்து அழ வைத்தார். அதே சமயம் குயின்ஷி மற்றும் நிவாஷினியிடம் வழித்து பேசிக்கொண்டிருந்தார்.
இதில் அவர் குயின்ஸியிடம் நடந்துகொண்ட விதம் குறித்து ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வந்த நிலையில், குயின்ஸி எச்சரிக்கையாக இவரிடம் இருந்து தப்பிவிட்டார். அடுத்து இவரின் கண்ணில் பட்டவர் சிங்கப்பூர் பெண்ணான நிவாஷினி. அவரின் மடியில் படுத்துக்கொள்வது கட்டிப்பிடிப்பது, சாப்பாடு ஊட்டி விடுவது என்று அசல் தனது கடலையை தொடங்கிவிட்டார். இது ஒருபுறம் இருக்க மறுபுறம் மைனாவின் மற்றும் மகேஷ்வரியிடம் தொட்டு தொட்டு பேசுவது என்று பல விமர்சனஙகளை பெற்று வருகிறார். இதில் நிவாஷினியிடம் எல்லை மீறும் வகையில் உரசி உரசி பேசி வருகிறார்.
இது குறித்து பேசியுள்ள முன்னாள் பிக்பாஸ் பிரபலம் வனிதா விஜயகுமார், அவன் செய்வதை பார்க்கும்போது அருவருப்பக உள்ளது. அவன் லவ் பண்ணாலும் பார்க்க நன்றாக இரந்தால் ஒன்றும் தெரியாது. ஆனால் அவன் நடந்துகொள்ளும் விதம் அவன் பாடி லாங்வேஜ், பார்க்கும்போது அவன் மனதில் ஏதோ இருக்கிறது. இதில் நிவாஷினி அவன் மீது விருப்பத்துடன் இருக்கிறாரா என்பது தெரியவில்லை என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“