scorecardresearch

ஒரு சோப்பு விளம்பரத்தில் சேர்ந்து நடிச்சது குத்தமா?! அஸ்வின்- லாஸ்லியாவை கோர்த்து விடும் ரசிகர்கள்!

ரசிகரின் கமெண்ட்டுக்கு இன்ஸ்டாகிராமில் லைக்குகள் குவிய, தற்போதைய சின்னத்திரை ட்ரெண்டிங்கில் ஹாட் டாப்பிக் நம்ம லாஸ்லியாவும் அஸ்வினும் தானாம்.

ஒரு சோப்பு விளம்பரத்தில் சேர்ந்து நடிச்சது குத்தமா?! அஸ்வின்- லாஸ்லியாவை கோர்த்து விடும் ரசிகர்கள்!

Losliya Ashwin Marriage Fans Comment in Instagram : பிக்பாஸ் தமிழின் 3-வது சீசன் மூலம் தமிழக திரை ரசிகர்களுக்கு அறிமுகமானவர் இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா. பிக்பாஸ் நிகழ்ச்சியில் முக்கிய கான்செப்ட்கள் இவரிடம் இருந்து கிளம்பி, விஸ்வரூப பிரச்னையாக உருவெடுத்தது என்று சொன்னால் அது மிகையல்ல. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு, பிரண்ட்ஷிப் உள்ளிட்ட பெயரிடப்படாத மேலும் 4 படங்களில் நடித்து வருகிறார் நடிகை லாஸ்லியா.

பிக்பாஸ் நிகழ்ச்சியில், கொஞ்சும் யாழ்பான தமிழில் தமிழக ரசிகர்களை கவர்ந்த லாஸ்லியா, தனது ரசிகர் பட்டாளத்தை சிதைவடையாமல் வைத்து கொள்வதற்காக அடிக்கடி போட்டோ ஷூட் எடுத்து சோஷியல் மீடியாக்களில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறார். இதற்கிடையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சி புகழ் அஸ்வினுடன் ஆச்சி குழும தயாரிப்புகளில் ஒன்றான சோப்பு விளம்பரத்தில் நடித்துள்ளார். ஆச்சி குழுமத்தின் சோப்பு விளம்பரப் படம் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. விளம்பரத்தில் லாஸ்லியா ‘மரண கவர்ச்சியாக’ நடித்துள்ளார் என சமூக வலைதளங்களில், லாஸ்லியாவின் ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர்.

சமீபத்தில் நிகழ்ந்த போட்டோ ஷூட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை லாஸ்லியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட, செம்ம ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது. இன்ஸ்டாகிராம் பதிவின் கீழ், பல லட்ச ரசிகர்களின் மனதில் உள்ள கருத்தை தெரிவிப்பது போல, ரசிகர் ஒருவர் ’லாஸ்லியா, நீங்க ஏன் குக் வித் கோமாளி அஸ்வின கல்யாணம் பண்ணிக்க கூடாது’ என கமெண்ட் செய்துள்ளார். அந்த ரசிகரின் கமெண்ட்டுக்கு இன்ஸ்டாகிராமில் லைக்குகள் குவிய, தற்போதைய சின்னத்திரை ட்ரெண்டிங்கில் ஹாட் டாப்பிக் நம்ம லாஸ்லியாவும் அஸ்வினும் தானாம். எது எப்படியோ, ஒரு விளம்பரத்துல ஒன்னா சேர்ந்து நடிச்சதுக்காக இப்படியாடா கோர்த்து விடுவிங்கனு அஸ்வினும் லாஸ்லியாவும் மனதிற்குள் நினைப்பதை ரசிகர்கள் கேட்ச் செய்திருப்பார்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Biggboss losliya cook with comali ashwin soap ad fans emotion expression marriage