/tamil-ie/media/media_files/uploads/2019/07/template-2019-07-12T160618.981-1.jpg)
losliya, biggboss, temple festival, poster, losliya army, லாஸ்லியா, பிக்பாஸ், கோவில் திருவிழா, போஸ்டர், லாஸ்லியா ஆர்மி
ரசிகர்களையும் தாண்டி சக போட்டியாளர்களுக்கும் லாஸ்லியா தான் செல்ல குழந்தையாக இருந்து வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வெறும் 24 மணி நேரத்திற்கு உள்ளாகவே சமூக வலைத்தளங்களில் ஆர்மிக்களை ஆரம்பித்துவிட்டனர் ரசிகர்கள். உலகெங்கும் உள்ள தமிழ்பேசும் மக்களிடம் நல்ல அறிமுகம் கொடுத்து உள்ளது பிக்பாஸ். அவரது சுபாவம் பிடித்து வயது பாகுபாடு இன்றி அனைத்துத் தரப்பிலும் அவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள்.
/tamil-ie/media/media_files/uploads/2019/07/template-2019-07-16T205627.638-300x200.jpg)
ஏற்கனவே, லாஸ்லியாவின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் படு வைரலாக பரவி வருகிறது. அதே போல இவரது ஆர்மிகளும் இவரது அப்டேட்டுகளை தவறாமல் வெளியிட்டு வருகின்றனர். இவரது லாஸ்லியாவின் வீடியோகளை மட்டும் கட் செய்து அதனை சமூக வலைதளத்தில் பதிவிட்டும் வருகின்றனர். லாஸ்லியாவிற்கு சமூக வலைத்தளத்தில் பல்வேறு ஆர்மிக்கள் இருப்பது தெரியும். அதிலும் உச்சகட்டமாக லாஸ்லியாவுக்கு பிளக்ஸ் வைத்து அதற்கு பாலாபிஷேகம் செய்து, குத்தாட்டம் போட்டு கொண்டாடி இருக்கிறார்கள் அவரது ரசிகர்கள். இது இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சினிமா ஸ்டார்களுக்கு கட் அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்வதை போல கொண்டாடித் தீர்த்தனர்.
இந்நிலையில், திருநெல்வேலியில் நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோயில் ஆனித் திருவிழா தேரோட்டம் கோலாகலமாக தொடங்கியது. வழக்கமாக திருவிழா என்றால் இளசுகள் பெரும்பாலும் தனது ஆஸ்தான நடிகர்களின் போட்டோவைப் போட்டு ப்ளக்ஸ் அடித்து வைப்பது வழாக்கம், அந்த வரிசையில் லாஸ்லியா ரசிகர்கள் ப்ளக்ஸ் அடித்து ஊர் முழுவதும் ஒட்டியுள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.