நடிகை, மாடலிங் என பல அவதாரங்களை நமக்கு காட்டிய பிக்பாஸ் புகழ் மீரா மிதுன் அரசியல் கட்சியினரோடு எடுத்துக்கொண்ட போட்டோவை, அவர் மீதான பரபரப்பை மேலும் அதிகரித்துள்ளார்.
மாடல் அழகியான மீராமிதுன், 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் இந்தியா அழகிப் போட்டியில் பட்டத்தை வென்றிருந்தார். ஆனால், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஆனால், பட்டத்தை தவறாக பயன்படுத்தி பல்வேறு மோசடி செய்ததால் இவரிடமிருந்து அழகி பட்டம் பறிக்கப்பட்டது.
மாடல் அழகி மட்டுமல்லாமல் மீரா மிதுன் 8 தோட்டாக்கள், தானாசேர்ந்தகூட்டம் போன்ற படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஆனால், இவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தது இவர் சர்ச்சை மூலமாகத்தான். அதுமட்டுமல்லாமல் ஜோ ,மைக்கேல் என்பவர் இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னதாகவே இவர் சமூக வலைதளத்தில் மிகவும் சர்ச்சையான ஒரு நபராக பேசப்பட்டு வந்தார். இப்படிப்பட்ட நிலையில்தான் மீராமிதுன் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்ற பின்னர் இவர் மேலும் சர்ச்சையில் சிக்கி இருந்தார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் நம்ம வீட்டு பிள்ளை, அக்னி சிறகுகள் என்று இரு படங்களில் கமிட்டாகி இருந்தார். மேலும், நம்ம வீட்டு பிள்ளை படத்தில் மேலும், சில காட்சிகளில் கூட நடித்திருந்தார். ஆனால், பிக்பாஸ் வீட்டில் இவரது லட்சணத்தை கண்ட பின்னர் இவர் நடித்த காட்சிகள் நீக்கப்பட்டது. அதேபோல அக்னிசிறகுகள் படத்தில் இருந்து நீக்கப்பட்டு விட்டார் இவருக்கு பதிலாக கமலின் இளைய மகள் அக்ஷராஹாசன் கமிட் செய்யப்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த மீரா மிதுன் அதை கடுமையாக விமர்சித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.
இப்படி பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி இருந்த மீரா சமீபத்தில் சரவணன் தனது தந்தைக்காக கட்டிய கோவிலின் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டார். இந்த விழாவில் அதிமுக பிரமுகர்கள் சிலரும் வந்து இருந்தார்கள். அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை மீராமிதுன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார் அதில், அதிமுக தலைவர்களான ஆர் இளங்கோவன் மற்றும் ஓமலூர் சட்டமன்ற உறுப்பினர், ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர், கழக செயலாளர்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி என்று பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மீரா, அரசியலில் வரப் போகிறாரா என்று கலாய்த்து வருகிறார்கள். அதேபோல பிக்பாஸ் வீட்டில் இவர் செய்த அரசியல் பார்த்தாதான் என்றும் கேலி செய்து வருகிறார்கள்.