பிக் பாஸ் 3 வீட்டில் உள்ள ரகசிய அறையை பயன்படுத்த வேண்டும் என்று நினைக்கிறீர்களா என கமல்ஹாசன் கேட்கும் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் வீட்டில் இருந்து இன்று ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட உள்ளார். முன்னதாக கமல் ஹாஸன் ரகசிய அறைக்கு சென்று சுற்றிப் பார்த்தார். இந்நிலையில் ரகசிய அறை குறித்த ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் கமல் பார்வையாளர்களை பார்த்து ஒரு கேள்வி கேட்டு அதிருப்தி அடைகிறார்.
இந்த ரகசிய அறையை பயன்படுத்துவார்கள் என்று உங்களுக்கு தோன்றுதா என கமல் பார்வையாளர்களை பார்த்து கேட்கும் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. ரகசிய அறையை பயன்படுத்தணும்னு நினைக்கிறீர்களா என்று கமல் கேட்க பார்வையாளர்கள் ஆமாம் என்று பதில் அளிக்க உங்களை திருத்தவே முடியாது என்கிறார் கமல்.
பிக் பாஸ் 3 வீட்டில் உள்ளவர்களில் யாரை காப்பாற்றலாம் என்று கேட்கிறார் கமல் ஹாஸன். பிக் பாஸ் 3 வீட்டில் இருந்து இன்று இரவு யார் வெளியேற்றப்படுவார் என்பது குறித்த ப்ரொமோ வீடியோ வெளியாகும் என்று பார்வையாளர்கள் ஆவலுடன் காத்திருந்தார்கள்.
கமல் ஹாஸன் எவிக்ஷன் பற்றி கூறுவார் என்று எதிர்பார்த்தால் அவர் யாரை காப்பாற்றலாம் என்று கேட்க அங்கிருந்தவர்களோ கவின் என்று கூறும் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. மேலும் அபிராமி வாராவாரம் நாமினேஷனில் இருப்பது குறித்தும் பேசியுள்ளார் கமல்.