நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து 3வது முறையாக தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 3, 100வது நாளை எட்டியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. முதல் 15 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சி அடுத்த இரண்டு நாட்களில் ஒரு போட்டியாளரையும் வைல்டு கார்டு என்ட்ரியில் ஒரு போட்டியாளரையும் சந்தித்தது. மொத்தம் 17 போட்டியாளர்களுடன் நகர்ந்த இந்நிகழ்ச்சியில் மொத்தம் நான்கு பேர் பைனல்ஸ்க்கு தகுதி பெற்றுள்ளனர். முகென் ஏற்கனவே கோல்டன் டிக்கெட் பெற்று பைனல்ஸ்க்கு தகுதி பெற்றுவிட்டார். முகெனை தொடர்ந்து சாண்டி, லாஸ்லியா, ஷெரின் ஆகியோரும் பைனல்ஸ்க்கு தகுதி பெற்றிருப்பதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார் கமல். இதனை தொடர்ந்து, முகென், சாண்டி, ஷெரின், லாஸ்லியா ஆகியோர் இறுதிப்போட்டிக்கான களத்தில் உள்ளனர்.
அடுத்தவாரத்துடன் பிக்பாஸ் நிகழ்ச்சி பினாலேவுடன் நிறைவடைய உள்ள நிலையில், கடைசியாக பிக்பாஸ் போட்டியாளர்கள் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு மீரா மிதுன், ரேஷ்மா, மோகன் வைத்யா, ஃபாத்திமா பாபு ஆகியோர் பிக்பாஸ் வீட்டிற்கு வந்தனர். அவர்கள் பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.
100வது நாள் நிகழ்ச்சிக்கென விஜய் டிவி வழக்கம்போல 3 புரோமோக்களை வெளியிட்டுள்ளது.
முதல் புரோரேமாவில், பைனல்ஸை கொண்டாடும் வகையில் பழைய போட்டியாளர்களை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார் பிக்பாஸ்.இசை நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்துள்ளார் பிக்பாஸ். அதன்படி நடைபெறும் இசை நிகழ்ச்சியில் முகென், என்ன மறந்த.. என்ன மறந்த.. பாடலை பாடி அசத்துகிறார். இதனை ஹவுஸ்மேஸ்கள் மெய் மறந்து ரசிக்கின்றனர். இப்படியாக முடிவடைகிறது முதல் புரோமோ.
இரண்டாவது புரோமோவையும் முகெனே ஆக்கிரமித்துள்ளார். இந்த புரோமோ, நேற்றைய எபிசோடின் தொடர்ச்சியாக உள்ளது. இதில் பேசும் முகென் மறக்க முடியாத நினைவுகளை கொடுத்துள்ள பிக்பாஸ்க்கு நன்றி கூறினார். குறுகிய காலத்தில் பலருக்கும் மறக்க முடியாத நினைவுகளை கொடுத்த பிக்பாஸ்க்கும் மகிழ்ச்சியான நினைவுகளை கொடுத்த சாண்டிக்கும் தேங்க்ஸ் என கூறுகிறார்.
மூன்றாவது புரோமோ, செம கலக்கலாக உள்ளது என்று பார்வையாளர்கள் சொல்லியுள்ளனர்.
முன்பு வந்தபோது செய்த, அதே யோகாவை செய்கிறார் மீரா மிதுன். கைகளை உருட்டி இதனை பிரஷ் செய்த படியே அருகில் அமர்ந்து வேடிக்கை பார்க்கிறார் சாண்டி. அதனை தொடர்ந்து மீரா மிதுனை போல கைகளை உருட்டி அவர் செய்யும் யோகாவை கிண்டலடிக்கிறார் சாண்டி. கக்கூஸே பலபலன்னு ஆகுது திடீரென கண் விழித்து பார்க்கும் மீரா மிதுன், சாண்டியின் முகத்தை அருகில் பார்த்து அச்சப்படுகிறார். இதனை தொடர்ந்து பாத்ரூம் வாசலில் கையில் பாத்ரூம் கிளினருடன் வரும் சாண்டி, கக்கூஸே பலபலன்னு ஆகுது நீ ஆகமாட்டியா.. வாய திற என்று மீரா மிதுனை விரட்டுகிறார். இவ்வாறாக முடிகிறது அந்த புரோமோ....