பிக்பாஸ் நிகழ்ச்சி 100 நாட்களை கடந்துள்ளது. இதனை முன்னிட்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று வெளியேறிய போட்டியாளர்களை மீண்டும் வீட்டிற்குள் அழைத்து வந்துள்ளார் பிக்பாஸ். இதனை தொடர்ந்து மூன்றாவது முறையாக பிக்பாஸ் வீட்டிற்கு வந்துள்ளார் வனிதா. வந்த கையோடு, எப்போதும் போல சண்டையை ஆரம்பித்து தனது வேலையை தொடங்கிவிட்டார்.
பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் வந்துள்ள வனிதா ஷெரினை கதறவிட்டுள்ளார். பிக்பாஸ் வீட்டிற்கு மீண்டும் வனிதா, சேரன், கஸ்தூரி, சாக்ஷி, அபிராமி ஆகியோர் வந்துள்ளனர். இது இன்று வெளியான முதல் புரோமோவில் தெரியவந்தது. வந்த கையோடு வனிதா ஹவுஸ்மேட்ஸுடன் சண்டை போட்டதும் வழக்கம்போல மீண்டும் சண்டைபோட தொடங்கிவிட்டார். தர்ஷன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற ஷெரின் தான் காரணம் என்றார். இதனால் கோபப்பட்ட ஷெரினின் தோழியான சாக்ஷி, அவருக்காக பரிந்து பேசி வனிதாவிடம் சண்டை போட்டார்.
இரண்டாவது புரோமோவில், லவ் லெட்டர் எழுதுவியா? அதில் ஷெரின் தர்ஷனுக்கு எழுதிய லவ் லெட்டர் மேட்டரை கையில் எடுத்துள்ளார் வனிதா. அப்போது பேசும் வனிதா, நான் கற்பனை உலகத்துல இருந்தேன்னு யாரும் சொல்லவே முடியாது. நீ போய் லவ் லெட்டர் எழுதுவியா? என சாண்டி, லாஸ்லியா, அபிராமி, சேரன் ஆகியோரின் முன்பு கேட்கிறார்.
இதனை தொடர்ந்து, பாத்ரூமில் அழுது கொண்டிருக்கும் ஷெரினை சாக்ஷியும் கஸ்தூரியும் சமாதானப்படுத்துகிறார். அப்போது பேசும் கஸ்தூரி, ஈரை பேனாக்கி பேனை பெருமாளாக்கி விதவிதமா ஊதி பெரிசாக்குறது என்ன இந்த வீட்டுல புதுசா என வனிதா குறித்து கேட்கிறார் கஸ்தூரி. எவிக்ட் பண்றாங்க அவரை தொடர்ந்து வேறு ஒரு அறையில் பேசும் வனிதா, அன்னைக்கு நான் ஒரு விஷயம் பேசும்போது என் மேல மட்டும்தான் குற்றமாச்சு. ரெண்டாவது வாரம் அவன் வெளியே போயிருக்கான்னா தோராயமான கணிப்ப மட்டும்தான் நாம படிக்க முடியும், அதை வச்சு தான நம்மள எவிக்ட் பண்றாங்க என்கிறார்.
சூடு பறக்கும் இதனை கேட்டு நான் என்ன செய்கிறேன் என்று தெரியவில்லை என கதறி அழுகிறார் ஷெரின். இப்படியாக முடிகிறது இரண்டாவது புரோமோ.
புரோமோக்களை வைத்து பார்க்கும் போது இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சி சூடு பறக்கும் என தெரிகிறது.