பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள நடன இயக்குநர் சாண்டி, நடிகர் சிம்புவை இமிடேட் செய்து ஹவுஸ்மேட்ஸ்களை மட்டுமல்லாது நம்மையும் கலகலப்பாக்கி வருகிறார்.
பிக்பாஸ் வீட்டில் ஓபன் நாமினேஷன் நடைபெற்றதால் ஹவுஸ்மேட்ஸ்கள் மன வருத்தத்தில் இருந்தனர். அதனை மாற்றும் வகையில் எம்ஜிஆரை போல் வேடமிட்டு கலகலப்பாக்கினார் சாண்டி. இதனை ஹவுஸ்மேட்ஸ்கள் மட்டுமின்றி பார்வையாளர்களும் வெகுவாக ரசித்தனர்.
#Day37 #Promo1 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/xLE8k9B4tF
— Vijay Television (@vijaytelevision) July 30, 2019
இன்றைய புரோமோவின்படி பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ்களுக்கு பிக்பாஸ் ஒவ்வொரு நடிகரின் கெட்டப்பை கொடுத்துள்ளார். அதன்படி சரவணன் விஜயகாந்தை போலவும், சாண்டி சிம்புவை போலவும் லாஸ்லியா திரிஷா போலவும் வலம் வருகின்றனர்.
இன்னிக்கும் இருக்கு ஃபன்னு..! #Day37 #Promo2 #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/mxwccyCOtI
— Vijay Television (@vijaytelevision) July 30, 2019
இந்த கெட்டப்பை சரியாக பயன்படுத்திக்கொண்ட சாண்டி, சிம்புவை போல் பேசி, நடனமாடி அசத்தி வருகிறார். இதனை பார்த்த ரசிகர்கள் இன்றும் சாண்டியால் பிக்பாஸ் வீட்டில் நல்ல என்டர்டெய்ன்மென்ட் இருக்கு என இப்போதே குஷியாகி, டிவி முன் உட்கார துவங்கிவிட்டனர்.
இருக்கு….இன்னைக்கு நல்ல எண்டர்டெய்ன்மென்ட் இருக்கு!!!!