பிக்பாஸ் நிகழ்ச்சியில், தற்போது சென்டிமென்ட் கட்டத்தை எட்டியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில், சாண்டி மோகன் வைத்யா போல இமிடேட் செய்தது அனைவருக்கும் இல்லாமல், பிக்பாஸ்க்கும் பிடித்துப்போக, கன்டெஸ்டண்ட்கள் அனைவரையும் ஒவ்வொரு நடிகர், நடிகை போல இமிடேட் செய்வதற்கான டாஸ்க் குடுத்தார். சிம்புவாக சாண்டியும், 96 த்ரிஷாவாக லாஸ்லியா, மங்காத்தா அஜித் ஆக கவின் , விஜயகாந்த் ஆக சரவணன் உள்ளிட்டோர் வெளுத்துக்கட்டினர். பிக்பாஸ் வீடு மட்டுமல்லாது, நிகழ்ச்சியை பார்ப்பவர்களின் வீடும் சந்தோசமாகவே இருந்தது.
நாம் சந்தோசமாக இருப்பது பிக்பாஸ்க்கு பிடிக்கவில்லை போல
பிக்பாஸ் நிகழ்ச்சி 38வது நாளை எட்டியுள்ளது. 3 புரோமோ வீடியோக்கள் வெளியாகியுள்ளன.
முதலாவது புரோமோ வீடியோவில், மொட்ட கடுதாசி டாஸ்க் குறித்து ஒளிபரப்பானது. இதில் சாக்ஷி, அபிராமி, உள்ளிட்டோர் லாஸ்லியா பத்தி கேள்வி எழுதியுள்ளனர். சாண்டி கவின் தொடர்பான கேள்வியை கேட்கிறார்.
இரண்டாவது புரோமோ வீடியோவில், எனக்கும் கவினுக்கும் உள்ள உறவு என்ன என்பது குறித்து லாஸ்லியா விளக்குகிறார். சாக்ஷி இதனிடையே கேள்வி கேட்க, அதற்கு பதிலளிக்காமல், லாஸ்லியா தவிர்க்கிறார்.
கடைசி வீடியோவில், சாக்ஷியை ரேஷ்மா, ஷெரீன் உள்ளிட்டோர் சாந்தப்படுத்துகின்றனர். break up எல்லாத்துக்கும் ஆகும் என்ற பொன்மொழியை ரேஷ்மா உதிக்கிறார்.
ஆக மொத்தத்தில், இன்றைய எபிசோட், சென்டிமென்டாக அமைவது மட்டுமல்லாது சாக்ஷி அழுவதை பார்த்து எத்தனை பேர் அழப்போகிறார்களோ.....அது அந்த கடவுளுக்கே வெளிச்சம்!!!