பிக்பாஸ் போட்டி 42வது நாளை எட்டியுள்ளது. சேரன் - சரவணன் சண்டை, லாஸ்லியா -கவின் - சாக்ஷி முக்கோண காதல், எலிமி்னேசன் என களைகட்டும் பிக்பாஸ் இன்றைய வாரஇறுதி நாட்களின் நிகழ்ச்சி ரொமான்ஸ் மூடோடு அமைய உள்ளது பார்வையாளர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
பிக் பாஸ் 3 வீட்டிற்கு வந்த புதிதில் அப்பாவி போன்று இருந்த லாஸ்லியா தற்போது கவினை காதலிக்கிறார். அதே கவினை சாக்ஷியும் காதலிக்கிறார். கவின், சாக்ஷி, லாஸ்லியாவின் முக்கோண காதலை பார்த்து கமல்ஹாஸனே கடுப்பாகியுள்ளார்
கமல் ஹாஸனை பார்த்து லாஸ்லியா, நான் த்ரிஷா, நாம் சேர்ந்து மன்மதன் அம்பு படத்தில் நடித்துள்ளோம். நீ நீல வானம் பாடலில் நடித்த அனுபவம் பற்றி கொஞ்சம் சொல்லுங்க என்று கேட்டார். அதற்கு கமலோ, இன்னும் அந்த காதல் மூடில் இருந்து வெளியே வரவில்லை என்பது தெரிகிறது என்று கூறி நோஸ்கட் கொடுக்கும் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் 3 வீட்டில் இருக்கும் தர்ஷனுக்கும், ஷெரினுக்கும் இடையே காதல் என்று பார்வையாளர்கள் நினைத்தார்கள். இந்நிலையில் ஷெரின் வெறும் தோழி மட்டுமே என்று தர்ஷன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தர்ஷன் பற்றிய ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் 3 வீட்டில் உள்ளவர்களை இரண்டு-இரண்டு பேராக அமர வைத்து கமல் கேள்வி கேட்கும் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. கமல் கேள்வி கேட்க அருகில் உள்ளவராக மாறி அந்த போட்டியாளர் பதில் அளிக்க வேண்டும். தர்ஷனுடான உறவின் தற்போதைய நிலை என்ன என்று கமல் கேட்க லாஸ்லியா ஷெரினாக மாறி வெட்கப்பட்டு சிரிக்கிறார்.
ஷெரின் உங்களின் கண்களுக்கு இந்த வீட்டில் ஷெரின் தான் அழகான பெண்ணா என்று கமல் கேட்க தர்ஷன் அருகில் அமர்ந்திருக்கும் முகென் ராவ் ஆமாம் சார் என்கிறார். இதை கேட்ட தர்ஷனோ, அபிராமி வரும்ல வச்சுக்கிறேன் என்று கூறி கலாய்க்கிறார். இந்த பிக் பாஸ் வீட்டில் யார், யாரை காதலிக்கிறார் என்பதே சரியாக புரியவில்லை. ஒரே குழப்பமாக இருக்கு ...