தற்கொலைக்கு முயற்சித்த நடிகை மதுமிதா, பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள புரோமோ, பிக்பாஸ் ரசிகர்களின் இதயத்துடிப்பை எகிற வைத்துள்ளது. வெற்றியாளர் ஆவார் என்று பார்வையாளர்கள் கருத்து தெரிவித்தனர். கமலும் மதுமிதாவை பாராட்டித்தான் பேசிவருகிறார். இந்நிலையில், அவர் வெளியேற்றப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள புரோமோ, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிக் பாஸ் வீட்டில் கடந்த சில நாட்களாக இரு அணிகளாக பிரிந்து சண்டை நடந்து வருகிறது. இதில், இதில் ஆண்கள் அணியில் லாஸ்லியாவும், பெண்கள் அணியில் சேரனும் உள்ளனர். முதலில் கவினுக்கும், மதுமிதாவுக்கும் இடையே சண்டை உண்டானது. அதில், பிக் பாஸ் வீட்டில் ஆண் போட்டியாளர்கள், பெண் போட்டியாளர்களை அடிமைப்படுத்துவதாக மதுமிதா குற்றம் சாட்டினார். இது தொடர்பான சண்டை நேற்றும் தொடர்ந்தது.
சேரன் சமாதானம் செய்கிறேன் என தர்ஷனையும், மதுமிதாவையும் பேச வைக்க, அது மற்றொரு சண்டையில் போய் முடிந்தது. மதுமிதாவிற்கு சேரனும், வனிதாவும் அறிவுரை செய்தனர். இதனால் மதுமிதா தீவிர மன அழுத்தத்திற்கு ஆளானார். அவர் பெரும் குழப்பத்தில் இருந்தது அவரது முகத்திலேயே தெரிந்தது. ஆனால், அதற்குப் பின்னர் நடந்த கேப்டனுக்கான போட்டியில் அவர் கலந்து கொண்டு வெற்றி பெற்றார்.. அப்போட்டியில் அவர் கோல்மால் செய்து தான் வெற்றி பெற்றதாக, நெட்டிசன்கள் ஆதாரத்துடன் கூறி வருகின்றனர். இந்தப் பிரச்சினை பிக் பாஸ் வீட்டிலும் வெடித்திருக்கும் எனத் தெரிகிறது.
ஒருவேளை கவினுடனான பிரச்சினையால் தான் அவர் தற்கொலைக்கு முயன்றாரா என்பது இன்றைய நிகழ்ச்சியை பார்த்தால் தான் தெரியும்.
வனிதாவை கமல்ஹாசன் கடிந்துகொள்வதாக இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. கமல் - வனிதா உரையாடலுக்கு பார்வையாளர்கள் கைதட்டி ஆரவாரம் செய்கின்றனர்.