பிக்பாஸ் நிகழ்ச்சி, 57வது நாளை எட்டியுள்ளது. முதல் புரோமோவில், பிக்பாஸிடம் சேரன் குறித்து லாஸ்லியா பேசுவது போலவும், இரண்டாவது வீடியோவில், கவினுடன், லாஸ்லியா பேசும்போது அழுவதும், 3வது புரோமோவில், தர்ஷன் , பிக்பாஸ் பேசுவது போன்ற வீடியோக்கள் வெளியாகியுள்ளன.
பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போதுதான் களையிழக்க துவங்கியுள்ளது அப்படிவேணும்னா சொல்லலாம். நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிட்டு இருக்குற கமல்ஹாசனுக்கே, பிக்பாஸ் பல்வேறு எல்லைகளை விதித்துவிட்டதால், கமல்ஹாசனும், தாமரை இலை நீர்போலவே, வாரஇறுதி நாட்களில் நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார்.
வார இறுதிநாட்களில் கமலை பார்ப்பதற்கென்றே தனியாக கூட்டம் உள்ளது என்பது தனிக்கதை, அதை பிக்பாஸ் மறந்துவிடாமல் இருப்பது அந்நிகழ்ச்சிக்கு நல்லது.
சேரன் அப்பா, வேற அப்பாவா ஆகிட்டாரான்னு கேட்டபோது லாஸ்லியாவிடம் கமல் கேட்டபோது, சேரன் அப்பா தன்னை டாஸ்க்கில் குறை சொல்லி ஜெயிலுக்கு அனுப்ப நினைச்சார். அப்போ நான் மனசளவில் உடைஞ்சு போயிட்டேன்னு சொன்னார். சேரன் தரப்பில் சரியான விளக்கம் தரப்பட்டது. அவர் இன்னும் பேசித் தீர்த்துக்க வேண்டிய விஷயங்கள் இருக்கு என்றும் சேரன் சொன்னார்.
அதன்படி லாஸ்லியாவை அழைச்சுட்டு வந்து தனியா பேசினார். மனம் உருக பேசினார். லாஸ்லியாவிடம் சேரன் சாக்லேட் உனக்கு குடுத்துட்டுத்தான் எப்போதும் சாப்பிடுவேன். இப்போது என் படுக்கைக்கிட்டே போயி பாரு உன்னோட ஷேர் அப்படியே இருக்கும்னு சொன்னார். அப்போதுதான் லாஸ்லியா என்னவோ அழுது வைப்போமே என்பது போல அழுதார். அப்போதும் அவரை தன் தோளில் சாய்த்து சேரன் ஆறுதலும் கூறினார்.
இரவு விளக்கு அணைத்த பின்னும் கவினுடன் சேர்ந்து பாத்திரம் தேய்த்துக் கொண்டு இருந்தார் லாஸ்லியா. நீ எதுக்கு இங்கே இருக்கேன்னு கவின் கேட்க, சும்மாதான்னு சொன்னார் லாஸ்லியா.நீ இந்த டீம்ல இருக்கியான்னும் கேட்டார்..இல்லே சும்மாதான்.நீ எதுக்கு இப்போ மூஞ்சை தூக்கி வச்சுக்கிட்டு இருக்கேன்னு லாஸ் கேட்டார்.இங்கே நடக்கற டிராமாவை என்னாலை பார்த்துக்கிட்டு இருக்க முடியலை மச்சான்னு சொன்னார் கவின். எதுக்கு என்கிட்டே மூஞ்சை தூக்கி வச்சுக்கிட்டு இருக்கேன்னு மறுபடியும் லாஸ் கேட்க, டிராமா உன்கிட்டத்தானே நடக்குதுன்னு சொன்னார் கவின்.
நிச்சயமா லாஸ்லியாவுக்கு சேரன் அப்பா உறவு நீடிக்காது. லாஸ்லியாவுக்கு கவின் மட்டுமே இலக்கு.. மற்றவங்க எல்லாமே........