பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக 61வது நாளை எட்டியுள்ளது. மூன்று புரோமோ வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளன. முதல் புரோமோ வீடியோவில், லட்டு சாப்பிடும் டாஸ்க், 2வது வீடியோவில் சேரன், கேப்டனாக பரிந்துரைக்கப்படுவது மற்றும் 3வது வீடியோவில், கவின் - லாஸ்லியா இடையேயான ஊடல் என்று புரோமோ வீடியோக்கள் வெளியாகியுள்ளன.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று சாண்டிக்கு பிடித்த டாஸ்க்கே கொடுக்கப்பட்டுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் என்னதான் சண்டை சச்சரவுகள் இருந்தாலும் அவ்வப்போது அதன் நடுவே சில டாஸ்க்குகளும் கொடுக்கப்படுகின்றன. போட்டியாளர்களுக்கு நாள்தோறும் ஒவ்வொரு டாஸ்க்கும் அதில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகளும் ஸ்பான்சர்களால் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்று பிக்பாஸ் வீட்டில் சாப்பாட்டு போட்டி நடத்தப்படுகிறது. இதில் சாண்டியும் தர்ஷனும் பங்கேற்கின்றனர்.
அவர்களுக்கு லட்டு கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நேரத்தில் அதிக லட்டுகளை சாப்பிடுபவர்கள் வெற்றியாளர்கள் என அறிவிக்கப்படுவார்கள் என தெரிகிறது. இந்த போட்டியின் நடுவராக சேரன் உள்ளார். போட்டியின் படி தர்ஷனும் சாண்டியும் தலா 25 லட்டுகளை மீதம் வைத்து போட்டியை நிறைவு செய்துள்ளனர். எத்தனை லட்டுகள் கொடுக்கப்பட்டது, எத்தனை லட்டுகளை சாப்பிட்டனர் என்பது தெரியவில்லை. ஆனால் இனிப்பை விரும்பி சாப்பிடும் சாண்டி, நிச்சயம் இந்த போட்டியில் மகிழ்ச்சியுடன் பங்கேற்றிருப்பார் என தெரிகிறது.
பிக்பாஸ் வீட்டின் கேப்டனாக ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் தேர்வு செய்யப்படுகிறார். அந்த வகையில் இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பெரும்பாலான போட்டியாளர்கள் இதுவரை கேப்டன் ஆகி விட்டார்கள். சேரன், கவின், லாஸ்லியா, கஸ்தூரி ஆகியோர்தான் இதுவரை பிக்பாஸ் வீட்டின் கேப்டனாகவில்லை. ஒவ்வொரு முறையும் டாஸ்க்கையும் வாரப்பணிகளையும் சரியாக முடிக்கும் சேரன் கேப்டனாக வாய்ப்பே கிடைக்கவில்லை.
இந்த முறை டாஸ்க்கிலும் சரி, வாரப் பணியிலும் சரி சேரனின் பெயரை ஹவுஸ்மேட்ஸ்கள் பரிந்துரைத்தனர். கேப்டனுக்கான போட்டி இதனை தொடர்ந்து சேரன், சாண்டி, லாஸ்லியா ஆகிய மூன்று பேரும் இரண்டாவது முறையாக கேப்டன் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு இன்று கேப்டனுக்கான போட்டி நடைபெறுகிறது. சேரனின் பெயர் அதன்படி எந்த போட்டியாளரின் பெயர் முதலில் ஐந்து முறை எடுக்கப்படுகிறதோ அவரே வீட்டின் கேப்டன் என அறிவிக்கிறார் பிக்பாஸ். இதைத்தொடர்ந்து சேரனின் பெயர் முதலில் ஐந்து முறை எடுக்கப்படுகிறது. பிக்பாஸ் வீட்டின் கேப்டன் இதனால் சேரன் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டின் கேப்டனாக அறிவிக்கப்படுகிறார்.
மூன்றாவது புரோமோ வீடியோவில், கவினும் - லாஸ்லியாவும் தனிமையில் பேசிக்கொள்வது வெளியாகியுள்ளது.