பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை யாருடனும் மோதல்போக்கை கடைப்பிடிக்காது இருந்த லாஸ்லியா, தற்போது முதன்முதலாக தனது போக்கை மாற்றியுள்ளார். கவினுக்காக, சாண்டியுடன் வாக்குவாதம் செய்வதாக இன்று வெளியான புரோமோ வீடியோக்களில் உள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சி, 89வது நாளை எட்டியுள்ளது. நிகழ்ச்சி நிறைவடைய இன்னும் சில தினங்களே உள்ளதால், பரபரப்புகளுக்கு பஞ்சமில்லாமல் நிகழ்ச்சி செல்லும் என்ற பார்வையாளர்களின் எதிர்பார்ப்பை நிறைவேறும் விதத்திலேயே, நிகழ்ச்சியும் சென்றுகொண்டிருக்கிறது. சேரன், கவின், முகென், லாஸ்லியா, தர்ஷன் மற்றும் சாண்டி மட்டுமே தற்போது பிக்பாஸ் வீட்டில் உள்ளனர். இன்னும் 2 வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில், வெற்றியாளர் யார் என்பதில் இவர்களுக்கிடையே கடும்போட்டியே நிலவிவருகிறது.
கவினும் லாஸ்லியாவும் காதலித்து வருகின்றனர். இதற்கு லாஸ்லியாவின் பெற்றோர் ஒப்புக்கொள்ளாத நிலையில் கவினுடனான காதலை முறித்துக்கொள்ள வேண்டும் என்றும் எச்சரித்தனர். அப்போது சரி என்று கூறிய லாஸ்லியா, மறுநாளே கவினுடன் தனது பெற்றோர் விருப்பப்படி இருக்கப்போவதாக கூறினார். ஆனால் சொன்னப்படி லாஸ்லியா நடந்து கொள்ளவில்லை. தொடர்ந்து கவினிடம் கடலை போட்டு வருகிறார்.
முதல் புரமோவில் கவினுக்கு விட்டுக்கொடுக்க வேண்டும், சப்போர்ட் செய்ய வேண்டும் என சாண்டியிடம் சண்டை போட்டார் லாஸ்லியா. அதனை கண்டுகொள்ளாமல் அமைதியாக வேடிக்கை பார்த்தார் கவின்.
இரண்டாவது புரோமோவில், கார்டன் ஏரியாவில் தங்க முட்டைக்கு கவினும் லாஸ்லியாவும் காவல் காக்கின்றனர். அப்போது சாண்டி அண்ணன் குடையை இங்கு சும்மாவா வச்சுது என்று லாஸ்லியாவிடம் கூறுகிறார் கவின். இதனைக் கேட்ட லாஸ்லியா, ஓ.. சாண்டியை நினைச்சேன்.. ஆனா இந்தளவுக்கு நினைக்கல என்று கூறி வில்லங்கமாக சிரிக்கிறார். இதனைக் கேட்டுக்கொண்டிருந்த சாண்டி, எதுக்கு என கேட்கிறார். அதற்கு லாஸ்லியா, உன்ன பத்தி ஒன்னு நினைச்சேன் அது கன்ஃபார்ம் ஆயிடுச்சு என்று கூறி மீண்டும் வில்லங்கமாக சிரிக்கிறார்.
கவினின் பதில் குடையை வச்சு மறைச்சேன்னு சொல்றியா என சாண்டி கேட்க, அதானே உன் ஸ்ட்ரேட்டஜி என்கிறார் கவின். இதனால் சாண்டியின் முகம் அப்படியே மாறிப் போகிறது. தனியாவா பேசுவாறு? இதனை கவனித்த தர்ஷன், இதில் என்ன ஸ்ட்ரேட்டஜி இருக்கு? நீங்க ரெண்டு பேரும் தனியா பேசிக்கிட்டு இருக்கீங்க, அப்போ அவரு தனியாவா பேசுவாறு? எங்களோடதான் பேசுவாரு என்று சாண்டிக்கு ஆதரவாக கவினிடம் ஏறுகிறார் தர்ஷன்.
ஸ்ட்ரேட்டஜினு சொல்லாதீங்க உடனே சமாளிக்கும் கவின், ஆமாம்டா அதை நான் தப்பு என்று சொல்லலேயே என்கிறார். அதற்கு தர்ஷன், அதனை ஸ்ட்ரேட்டஜி என்று சொல்லாதீர்கள் என்று கூறுகிறார். இதனால் கவின் முகம் லாஸ்லியாவின் முகமும் மாறுகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பார்வையாளர்களுக்கு மேலும் விறுவிறுப்பை வழங்கும் வகையில், ஹவுஸ்மேட்களை, பிக்பாஸ் தொடர்ந்து கலாய்த்து வருகிறார். பிக்பாஸின் இந்த கலாய்க்கு சாண்டியும் தப்பவில்லை என்பது குறிப்பிடத்க்கது.