பிக்பாஸ் நிகழ்ச்சியில் கன்பெக்சன் ரூமில் லாஸ்லியா கெக்கபெக்கவென சிரிக்க, பிக்பாஸ் டென்சன் ஆனார். இது நாமினேசன் புராசஸ், சீரியசா இருங்க என்று லாஸ்லியாவை பிக்பாஸ் எச்சரித்த நிகழ்வு, லாஸ்லியா ஆர்மியை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சி 92வது நாளை எட்டியுள்ளது. இன்னும் சில தினங்களில் நிகழ்ச்சி முடிவடைய உள்ளதால், உச்சகட்ட பரபரப்பான நிலை நிலவிவருகிறது. சாண்டி, தர்ஷன், கவின், முகென், லாஸ்லியா மற்றும் ஷெரின் தற்போது வீட்டினுள்ளே உள்ளனர். இதில், பைனலுக்கு முன்னேறும் கோல்டன் டிக்கெட்டை முகென் பெற்றுள்ளதால், அவர் சேப் ஜோனுக்கு சென்றுள்ளார். முகெனை தவிர்த்து மற்ற 5 போட்டியாளர்களுக்குத்தான் கடும் போட்டி நிலவி வருகிறது.
இன்று வெளியான முதல் புரோமோவில், கன்பெக்சன் ரூமில் தர்ஷனிடம், பிக்பாஸ் யாரை நாமினேட் செய்ய விரும்புகிறீர்கள் என்று கேட்கிறார். அதற்கு தர்ஷன், ஷெரீனை யாரும் நாமினேட் செய்ய முன்வரமாட்டார்கள், எனவே நான் அவரை நாமினேட் செய்கிறேன் என்று கூறுகிறார். அப்படியென்றால், பச்சை மிளகாயை சாப்பிடவேண்டும் என்று பிக்பாஸ் சொல்ல, அதை அப்படியே செய்கிறார். பின் மீண்டும் பச்சை மிளகாயை சாப்பிடும் தர்ஷன், சாண்டியை நாமினேட் செய்வதாக முதல் புரோமோ முடிவடைகிறது.
இரண்டாவது புரோமோவில், கன்பெக்சன் ரூமில், லாஸ்லியா அமர்ந்திருக்கிறார். யாரை நாமினேட் செய்ய போகிறீர்கள் என்று பிக்பாஸ் கேட்டதற்கு கவின் என்று பதிலளிக்கிறார். அதற்கு பிக்பாஸ், பச்சை மிளகாயை சாப்பிடவேண்டும் என்று கூறுகிறார். இதற்கு கெக்கபெக்கவேன லாஸ்லியா சிரிக்கிறார். இதனால், டென்சனான பிக்பாஸ். இது நாமினேசன் பிராசஸ், சீரியசா இருங்க என்று எச்சரிப்பதாக இரண்டாவது புரோமோ முடிகிறது.
மூன்றாவது புரோமோவில், தர்ஷன், லாஸ்லியா மற்றும் ஷெரீன் மற்ற 3 கன்டெஸ்டண்ட்களின் உடலில், பேக்கிங் கவரினால் சுற்றி, படுக்கவைத்து யார் முதலில் எழுந்து நிற்கிறார்கள் என்ற டாஸ்க் நடப்பதாக காட்டப்படுகிறது. இந்த டாஸ்க்கில், கவின், முகெனை காட்டிலும், சாண்டி துரிதமாக செயல்பட்டு எழுந்து நிற்க முயல்வதாக காட்டப்பட்டு அந்த புரோமோ முடிகிறது.