Advertisment

இன்று தொடங்குகிறது தெலுங்கு பிக்பாஸ் சீசன் 2 : தொகுத்து வழங்கும் நானி

தெலுங்கு ‘பிக் பாஸ்-2’ நிகழ்ச்சி இன்று தொடங்குகிறது. 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
இன்று தொடங்குகிறது தெலுங்கு பிக்பாஸ் சீசன் 2 : தொகுத்து வழங்கும் நானி

தமிழ் மற்றும் தெலுங்கில் கடந்த வருடம் அறிமுகம் செய்யப்பட்ட பிக்பாஸ் ஷோ ஹிட்டானது. அதிலும், தமிழ் பிக்பாஸ் காம்பவுண்ட் எகிறி ஹிட் அடித்தது. தமிழில் கமல்ஹாசன் தொகுத்து வழங்க, தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர் தொகுத்து வழங்கினார். இந்தாண்டுக்கான பிக்பாஸ் சீசனில், தமிழில் கமல்ஹாசனே தொடர, வரும் 17ம் தேதி இது தொடங்குகிறது. அதேசமயம், தெலுங்கில் 'நான் ஈ' புகழ் நானி தொகுப்பாளராக அப்பாயிண்ட் செய்யப்பட்டு இருக்கிறார். இந்நிலையில், தெலுங்கு ‘பிக் பாஸ்-2’ நிகழ்ச்சி இன்று (ஜூன் 10) தொடங்குகிறது.

Advertisment

நூறு நாட்கள் நடக்க உள்ள இந்த நிகழ்ச்சியில் 16 பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர். அவர்கள் யார் என்பது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. பல்வேறு நடிகர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்திய நடிகை ஸ்ரீரெட்டி கலந்து கொள்வார் என தகவல் வெளியானது. ஆனால், இதை அவர் மறுத்துள்ளார்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment