பிக்பாஸ் சீசன் 3ன் டைட்டில் வின்னர் யார் என்பது இன்னும் சில மணிநேரங்களில் தெரிந்துவிடும். அதை தெரிந்துகொள்வதற்காகவே, நீங்கள், நாங்க மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழகமே காத்துக்கொண்டிருக்கிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சி வடஇந்திய தொலைக்காட்சிகளில் சக்கைபோடு போட்டுவந்த நிலையில், இம்முயற்சியை தமிழிலும் மேற்கொள்ளலாம் என்ற பரிட்சார்த்த முயற்சியை விஜய் டிவி கையில் எடுத்தது. உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் புரோமோஷன்களால், பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சி பிரமாண்ட வெற்றி பெற்றது. சீரியல்களை பார்த்து வந்த பெண்கள் கூட, பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்க துணிந்தது.அந்த நிகழ்ச்சியின் வெற்றியாக கருதப்பட்டது.
பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில், ஆரவ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். முதல் சீசனில், ஆரவ் - ஓவியா காதல், மருத்துவ முத்தம் போன்ற சொற்கள் வைரல் ஆகின.
பிக்பாஸ் சீசன் 2யும், நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்கினார். இந்த சீசனின் வெற்றியாளரானார் ரித்விகா.
பிக்பாஸ் 3வது சீசனில், மிகவும் பிரபலம் இல்லாத நட்சத்திரங்கள் கலந்துகொண்டதால், முதலில் சுணக்கமாகவே நிகழ்ச்சி சென்றுகொண்டிருந்தது. பின் வனிதா விஜயகுமாரின் துடுக்குத்தனமான பேச்சு, லாஸ்லியாவின் அழகே மெளனமாக நிகழ்வு உள்ளிட்டவைகளால் நிகழ்ச்சி சூடுபிடிக்கத்துவங்கியது. வனிதா, மீரா மிதுன் உள்ளிட்டோர்களின் சர்ச்சை நிறைந்த வாழ்க்கை, இந்த நிகழ்ச்சியையும் பாதிக்கவே செய்தது. இருந்தபோதிலும், நிகழச்சியின் போக்கு அதேவேகத்தில் சென்றுகொண்டிருந்தது.
சேரன், கவின், வனிதா என 15 போட்டியாளர்களுடன் துவங்கிய பிக்பாஸ் சீசன் 3, 100க்கும் மேற்பட்ட நாட்களை கடந்து இன்று இறுதிநாளை எட்டியுள்ளது.
இறுதிப்போட்டியில், முகென், லாஸ்லியா, சாண்டி மற்றும் ஷெரின் உள்ளனர். இவர்களில் அதிக வாக்குகளை பெறுபவரே, டைட்டில் வின்னராக அறிவிக்கப்படுவார். இந்த கிராண்ட் பைனாலே நிகழ்ச்சி, இன்று மாலை 6 மணியிலிருந்து ஒளிபரப்பாக உள்ளது.
லாஸ்லியா தான் அனைவரின் தேர்வு ஆக உள்ள நிலையில், மக்களின் வாக்குகள் யாருக்கு கிடைத்துள்ளது. யார் டைட்டில் வின்னர் ஆக உள்ளார் என்பதற்கான விடை இன்னும் சிலமணிநேரங்களில் தெரிந்துவிடும்.