நிறைய மாற்றங்கள்… காத்திருக்கும் சர்ப்ரைஸ்… பிக் பாஸ் சீசன் 5 அப்டேட்ஸ்!
BIGGBOSS 5 tamil kamalhaasan latest Tamil News: 'பிக் பாஸ்' தொகுப்பாளர் கமல் நேற்று ப்ரோமோ ஷூட்டிங்கில் பங்கேற்று இருந்த நிலையில், நிகழ்ச்சி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இந்த வார இறுதியில் வெளிவரும் என எதிர்பார்க்கலாம்.
சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளுள் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியும் ஒன்று. கடந்த 2017ம் ஆண்டு முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டு வரும் இந்த ரியாலிட்டி ஷோவை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சிக்கான 5 -வது சீசன் கொரோனா காரணங்களால் தாமதப்படுத்தப்பட்டு வந்தது.
Advertisment
இந்நிலையில், இந்த நிகழ்ச்சிக்காக வழக்கம் போல் சென்னையில் உள்ள இவிபி ஸ்டூடியோவில் ஒரு பிரம்மாண்ட வீடு செட் அமைக்கப்பட்டு, இறுதிக்கட்ட பணிகள் சுறுசுறுப்பாக நடைபெற்று கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. எனவே, ஐந்தாம் சீசன் குறித்த சூப்பர் அப்டேட் இந்த வார இறுதியில், அதாவது வெள்ளிக்கிழமை மாலை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், அக்டோபர் மாதத்தில் தொடங்க உள்ளதாக கூறப்படும் இந்த 'பிக் பாஸ்' சீசன் 5ல் போட்டியாளர்களாக யாரெல்லாம் வரப்போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மனதில் அதிகரித்து இருக்கிறது. தவிர, இந்த ரியாலிட்டி ஷோவில் டிக் டாக் பிரபலம் ஜிபி முத்து, குக் வித் கோமாளி கனி உள்ளிட்ட பல பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்து கொள்ள உள்ளார்கள் என்ற உத்தேச பட்டியலும் அன்றாட இணைய பக்கங்களில் பகிரப்பட்டு வருகிறது. இருப்பினும், இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வந்தால் தான் உறுதியாகும்.
Advertisment
Advertisement
இந்த நிலையில், நிகழ்ச்சியின் தொகுப்பாளரான கமல்ஹாசன் நேற்று ப்ரோமோ ஷூட்டிங்கில் பங்கேற்று இருக்கிறார். இதனால் நிகழ்ச்சி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் வெள்ளிக்கிழமை மாலை நிச்சயம் வெளிவரும் என தகவல் பரவி வருகிறது. மேலும் கோலாகலமாக துவங்கவுள்ள பிக் பாஸ் சீசன் -5 புது லோகோ, புது வீடு, புது போட்டியாளர்கள், புதுப்புது பிரச்சனைகள் என கலைகட்ட உள்ளது. எனவே சுவாரஷ்யங்களுக்கு பஞ்சமிருக்காது.