பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் தொடங்க உள்ள நிலையில், விஜய் டிவியின் பிரபல சீரியல் முடிவுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரியாவிட்டி ஷோக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விஜய் டிவியில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. முன்னணி நடிகரான கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சியில் சின்னத்திரை மற்றும் சமூக வலைதளங்களில் பரபலமான பலரும் பங்கேற்று விளையாடியுள்ளனர்.
இதுவரை 5 சீசன்கள் முடிந்துள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியில் 6-வது சீசன் வரும் அக்டோபர் 9-ந் தேதியில் இருந்து தொடங்க உள்ளது. வழக்கத்திற்கு மாறாக பிரபலமில்லாத சிலரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பிக்பாஸ் 6-வது சீசன் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக விஜய் டிவியின் பிரபல சீரியல்கள் ஒளிபரப்பு நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதே சமயம் சமீபத்தில் தொடங்கப்பட்ட பாரதிதாசன் காலனி சீரியல் முடிவக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் திடீரென முடிக்கப்பட்டு, அதற்கு பதிலாக பாரதிதாசன் காலனி சீரியல் ஒளிபரப்பானது.
குறுகிய காலத்தில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த சீரியல் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக திடீரென நிறைவடைய உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வார இறுதியில் பாரதிதாசன் காலனி சீரியலின் க்ளைமேக்ஸ் ஒளிபரப்பாகும் என்று கூறப்படுகிறது.
அதே சமயம் தற்போது பரபரப்பான உச்சத்தை எட்டியுள்ள பாக்கியலட்சுமி சீரியல் பாண்யன் ஸ்டோர்ஸ் சீரியலுடன் மகாசங்கமமாக ஒளிபரப்பாகும் என்றும் கூறப்படுகிறது. கோபி ராதிகா திருமணம் தொடர்பான எபிசோடுகளால் பாக்கியலட்சுமி சீரியல் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“