‘இப்டியே அடக்கமா அமைதியாவே இருங்க!’ புத்தி சொன்ன பெண்ணுக்கு அனிதா சம்பத் பதிலடி

சமீபத்தில் மேக்கப் ரகசியங்களை வீடியோவாக பதிவிட்ட அனிதாவுக்கு, ஏராளமான பாராட்டுகளும், கமெண்டுகளும், விமர்சனங்களும் வந்த வண்ணம் உள்ளன.

பிக்பாஸ் சீசன் 4-ல் கலந்துக் கொண்ட அனிதா சம்பத்தை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்கமாட்டீர்கள். சீசன் 4 ஆரம்பித்து சில தினங்களிலேயே, சுரேஷ் சக்ரவர்த்தி, சோம் என பலரிடமும் சண்டையிட்டு ட்ரெண்டிங் ஆனவர், அனிதா சம்பத். பிக்பாஸ் 4-ன் நாயகனாக ரசிகர்கள் போற்றிய ஆரி அர்ஜுனனிடம் அனிதா சண்டையிட்ட பின்னர், ஒட்டு மொத்த பிக்பாஸ் ரசிகர்கள் பட்டாளமும் அனிதாவை சமூக வலைதளங்களில் வறுத்தெடுக்க, பிக்பாஸில் இருந்து வெளியேறினார் அனிதா சம்பத்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின், ஊடகங்களிடமிருந்து ஒதுங்கியே இருந்தார் அனிதா. எல்லா நேர்காணலையும் தவிர்த்து சைலண்ட் மோடுக்கு சென்றுவிட்டாரா என அவரது ரசிகர்களும், பிக்பாஸ் பிரியர்களும் சமூக வலைதளங்களில் பேசத் தொடங்கியப் பின், யூடியூபில் தனி சேனலை தொடங்கி ஊடகங்களில் மீண்டும் வலம் வர தொடங்கினார், அனிதா. அவரது யூடியூப் சேனலில், அவரைப் பற்றிய பல தகவல்களையும் வீடியோவாக பதிவிட்டு வருகிறார் அனிதா சம்பத். சமீபத்தில் அவருடையே மேக்கப் ரகசியங்களை வீடியோவாக பதிவிட்ட அனிதாவுக்கு, ஏராளமான பாராட்டுகளும், கமெண்டுகளும், விமர்சனங்களும் வந்த வண்ணம் உள்ளன.

இந்த நிலையில், ரசிகர் ஒருவர், ‘பிக்பாஸ்ல இருந்த போது, திமிரா இருந்தீங்க. இப்போ, அந்த திமிர் இல்ல. இதே மாதிரி அடக்கமா இருந்தா உங்கள எல்லாருக்கும் பிடிக்கும்’ என பெண் ஒருவர் கமண்ட் செய்துள்ளார்.

அந்த பெண்ணின் கமெண்டை பார்த்து கடுப்பான அனிதா சம்பத், ‘பொண்ணுனா அடக்கமா இருக்கனும்னு உன் வீட்ல சொல்லி குடுத்தாங்களா. அப்படி என்றால் நீங்க old school.. இப்படியே அடக்கமா அடிமையாவே இருங்க.. நான் போல்ட் கேர்ள். நான் எனக்காக சண்டை போடுவேன்.. அது திமிர் இல்லை’ என கடுகடுப்புடன் கமெண்ட் செய்துள்ளார்.

அனிதாவுக்கு ஆதரவாகவும், கமெண்ட் செய்த பெண்ணுக்கு ஆதரவாகவும் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Biggboss season four contestant anitha sampath angry react comment social media viral

Next Story
‘இதயம் நொறுங்குகிறது; கோபம் வருகிறது..!’ கண்ணீர் விடும் ராதிகா சரத்குமார்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com