பிக்பாஸ் பிரபலம் சுரேஷ் சக்ரவர்த்தி 80-ஸ் நடிகைகள் 3 பேருக்கு விருந்து வைத்துள்ள நிகழ்வு தற்போது இணையத்தில் அதிகம் கவனம் ஈர்த்துள்ளது.
தமிழ் சினிமாவில் நடிகர் இயக்குனர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என அறியப்பட்ட சுரேஷ் சக்ரவர்த்தி, 1984-ம் ஆண்டு வெளியான சாந்தி முகூர்த்தம் என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். தொடர்ந்து அழகன், மறுபடியும் உள்ளிட்ட சில படங்களில் நடித்த இவர், தெலுங்கு மொழிப்படங்களிலும் நடித்துள்ளார்.
மேலும், நீங்கள் கேட்ட பாடல், சப்தஸ்வரங்கள், பெப்சி உங்கள் சாய்ஸ், பாட்டுக்கு பாட்டு உள்ளிட்ட பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். தற்போது துப்பறிவாளன் 2 படத்தில் நடித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் மக்கள் மத்தியில் பிரலமான சுரேஷ் சக்ரவர்த்தி சின்னத்திரையில் பிரபலமான நடிகராக உள்ளார்.

இந்நிலையில் நடிகர் சுரேஷ் சக்ரவர்த்தி 80-களில் முன்னணி நடிகைகளாக இருந்த 3 நடிகைகளுக்கு விருந்து வைத்துள்ளார். மோகன் நடித்த தென்றலே என்னை தொடு என்ற படத்தின் மூலம் அறிமுகமான ஜெயஸ்ரீ, பாண்டியராஜனின் ஆண்பாவம் படத்தின் மூலம் அறிமுகமான நடிகை சீதா, தில்லு முல்லு படத்தில் அறிமுகமான விஜி சந்திரசேகர் ஆகிய மூவரும் சுரெஷ் சக்ரவர்த்தி வீட்டில் விருந்து சாப்பிட்டுள்ளனர்.
இந்த விருந்து நிகழ்ச்சி தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை சுரேஷ் சக்ரவர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சுரேஷ் சக்கரவர்த்தி வீட்டின் விருந்தின் சுவை குறித்தும் அந்த வீட்டிற்கு வரும்போது தாங்கள் பட்ட கஷ்டங்கள் குறித்தும் மூன்று நடிகைகளும் காமெடியாக பேசும் காட்சிகள் இந்த வீடியோவில் உள்ளன. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக்சை குவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“