மதுமிதா இந்தமுறையும் வெளியேற்றப்படமாட்டார் என்று கமல்ஹாசன் சொல்லியிருக்கிறார், தர்ஷன்- மீரா விவகாரத்தில் கவினை கலாய்க்கும் கமல்ஹாசன் என இதுவரை 2 பிக்பாஸ் புரோமோ வீடியோக்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 3 சீசன், 21வது நாளை நெருங்கியுள்ளது
முதல் வீடியோவில், ஷெரீன் தர்ஷனிடம் நீ மீராகிட்ட புரோபோஸ் பண்ணியா என்று கேட்டதாக தர்ஷன் கூறுகிறார். அதற்கு மீரா மிதுன் நீண்ட நெடிய விளக்கம் அளிக்கிறார். அதற்குள் கமல்ஹாசன், இந்த விஷயத்தை நாம கவின்கிட்ட கேட்போம்னு கூற, என் பிரச்னைய என்னால பாக்கமுடியாததனால தான் நான் ஜெயிலுக்கு போனேன்னு கவின் கூற அரங்கமே அதிருகிறது.
இரண்டாவது புரோமோ வீடியோவில், மதுமிதா காப்பாற்றப்பட்டுவிட்டதாக கமல்ஹாசன் கூறுகிறார். கடந்தமுறை மதுமிதா அழுததுபோன்று, சாண்டி இமிடேட் செய்து பார்வையாளர்களை கவர்கிறார். என்னடா நாம பண்ணவேண்டியத இவன் பண்றானேன்னு மதுமிதா பார்ப்பதும் அழகு, இவ்வாறாக இரண்டாவது புரோமோ வீடியோ முடிகிறது.
சண்டக்கோழி அவுட்? : பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் ஆளாக சீனீயரான பாத்திமா பாபு கடந்தவாரம் வெளியேறியிருந்த நிலையில் மற்றொரு சீனியரான மோகன் வைத்யா இந்த வாரம் வெளியேற்றப்படுவார் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். பட், கமல்ஹாசன் அவர் இருப்பதாக அறிவித்துவிட்டார். வனிதா விஜயகுமார் வெளியேற்றப்பட்டு விட்டதாக இணையதளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
எப்படியோ, இன்றைய நிகழ்ச்சியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என்பதை உறுதியாக சொல்லலாம்.