biggboss 5 Tamil News: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சி தொடங்கி 2 வாரங்களே ஆனா நிலையில் நிகழ்ச்சியில் பல திருப்பங்கள் அரங்கேறியுள்ளன. கடந்த வாரத்தில் திருநங்கை நமீதா மாரிமுத்து உடல்நலக் குறைவு காரணமாக நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். இதனால் 17 போட்டியாளர்கள் வீட்டிற்குள் இருந்தனர்.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக் கிழமை பிக்பாஸ் வீட்டில் முதல் நாமினேஷன் புராசஸ் நடைபெற்றது. இதில் மலேசியாவைச் சேர்ந்த மாடல் அழகியான ‘நாடியா சங்’ பிக்பாஸ் வீட்டில் இருந்து முதல் நபராக வெளியேற்றப்பட்டார். தற்போது பிக்பாஸ் வீட்டில் 16 போட்டியாளர்கள் உள்ளனர்.

எனினும், தற்போது வரை விறுவிறுப்பு குறையாமல் நடந்து வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்னும் எந்த சர்ச்சையும் வெடிக்கவில்லையே என எதிர்பார்த்திருக்கையில் போட்டியாளர் அபிஷேக் ராஜா பெரும் சர்ச்சையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறார். அவர் சக போட்டியாளர்களிடம் மாற்றி மாற்றி பேசி அந்நியணனாக நடந்து கொள்வதோடு, பெண் போட்டியாளர்களை அடிக்கடி பாத்ரூமில் கட்டிப்பிடித்து ஆதரவும் அளித்து வருகிறார்.


இதனால் வெறுப்படைந்துள்ள பிக்பாஸ் ரசிகர்கள், ‘அபிஷேக் ராஜா சீரியல் நடிகை பவானி ரெட்டி, மதுமிதா போன்ற பெண் போட்டியாளர்களை சுற்றி சுற்றி வருகிறார் என்றும், பவானியிடம் அடிக்கடி சென்று கடலை போட்டுக் கொண்டிருக்கிறார்’ என்றும் வலைதள பக்கங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும், இந்த சீசனில் ஆண்களை விட பெண்களே அதிகமாக உள்ளதால் அவர்களின் ஆதரவைப் பெறுவதற்காக அபிஷேக் இவ்வாறு செய்கிறா? என்ற குழப்பம் எழுந்துள்ளது என்றும், பிக் பாஸ் சீசன்1-ல் கலந்துகொண்ட பாடலாசிரியர் சினேகன் இதேபோன்றுதான் சக போட்டியாளர்களை அடிக்கடி கட்டிப்பிடித்து பெரும் சர்ச்சையை கிளப்பினார்.அதைத்தான் தற்போது அபிஷேக் ராஜா செய்து வருகிறார் என்றும் ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil