பிரியங்கா – நிரூப் , அக்ஷரா – சிபி …. மோதலின் உச்சத்தில் பிக்பாஸ் வீடு

Bigg Boss 5 Tamil Contestant cibi and akshara fighting in biggboss house Tamil News: தள்ளுமுள்ளு சண்டையில் வருண் – நிரூப், வார்த்தைப் போரில் சிபி – அக்ஷரா என மோதலின் உச்சத்தில் பயணிக்கிறது பிக்பாஸ் வீடு.

biggboss Tamil News: fight between cibi and akshara in biggboss house

Bigg Boss 5 Tamil News: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்றைக்கு நடந்த பொம்மை டாஸ்கில் பெரிய கலேபரமே அரங்கேறி மோதலின் உச்சத்தில் பிக்பாஸ் வீடு உள்ளது. பொம்மை டாஸ்க்கில், கடைசியாக சர்க்கஸ் டென்ட் உள்ளே வரும் போட்டியாளரின் கையில் உள்ள பொம்மைக்கு சொந்தக்காரர் எலிமினேட் ஆகிவிடுவார். இந்த டாஸ்க்கில் முதல் ஆளாக பிரியங்கா எலிமினேட் ஆகி வெளியேறினார்.

அக்ஷரா – வருண் மோதல்

டாஸ்க் இப்படி அனல் பறக்க அரங்கேறிய வேளையில் அக்ஷரா – வருண் இருவரும் திட்டம்போட்டு விளையாடினார்கள். அக்ஷராவின் பெயர் எழுதிய பொம்மையை வருண் எடுக்கமாலும், வருண் பெயர் கொண்ட பொம்மையை அக்ஷரா எடுக்கலாமலும் கள்ள ஆட்டையில் ஈடுபட்டனர்.

இதைக்கவனித்த நிரூப் அக்ஷரா ஓடிச்செல்லும் போது அவரை பிடித்துக்கொண்டார். கத்தினாலும் கதறினாலும் விடவில்லை. இதனால் டென்ஷன் ஆனா அக்ஷரா கடுமையான கோபத்தை வெளிப்படுத்தினார். அதோடு நிரூப்பின் வாயை உடைத்துவிடுவேன் என்றும் எச்சரித்தார்.

வருண் – நிரூப் தள்ளுமுள்ளு

இங்கு அக்ஷரா கையில் வைத்திருப்பது நிரூப் பொம்மை. எனவே, வருண் தனது பொம்மையை குறிவைப்பதை பார்த்து நிரூப் டென்சன் ஆகிறார். அடுத்த சுற்றில் நிரூப்பின் பொம்மையை வருண் எடுக்க, வருண் – நிரூப் இடையில் தள்ளுமுள்ளு நடக்கிறது. அப்போது மாறி மாறி திட்டி தீர்த்துகொள்கிறார்கள். “நீ என்னை குறிவைத்தால் நான் உன்னை எலிமினேட் செய்ய இப்படி செய்வேன்” என கத்தி சண்டை போடுகிறார் வருண். “அசிங்கமாக இல்லையா” என நிரூப்பை கோபத்துடன் கேட்கிறார் வருண்.

கெட்ட வார்த்தை மோதல்; சிபி – அக்ஷரா மோதல்

தொடர்ந்து டென்ட் உள்ளே அரங்கேறிய வாக்குவாதத்தில், அக்ஷரா தன்னை பிடித்து கொண்ட நிரூப்பை கோபத்துடன் எச்சரிக்கிறார். அப்போது சண்டைக்கு வரும் சிபி, ” பால் பிடிக்கும் டாஸ்கில் நீ என்னை தள்ளி வைத்துவிட்டு பால் பிடிப்பேன் என சொன்னாயே, நீ செய்தால் சரி, நிரூப் செய்தால் தவறா” என்று கேட்கிறார்.

அக்ஷராவோ, “தள்ளி வைப்பதும், இழுத்து பிடித்துக்கொள்வதும் ஒன்றா” எனக் கேட்கிறார். பிறகு சிபி சொன்ன ஒரு வார்த்தை அக்ஷராவின் கோபத்தை தலைக்கேற்றவே கடும் கோபத்திற்கு ஆளான அக்ஷரா பேச்சு வாக்கில் கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தி திட்டுகிறார்.

கெட்ட வார்த்தை வரும் இடங்களை பீப் போட்டு மறைக்கிறார் நம்ம எடிட்டர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் அப்பாவி போல வந்த அக்ஷராவா இப்படியெல்லாம் பேசுகிறார் என்று ஆச்சர்யம் அடைந்திருக்கிறார்கள் பிக் பாஸ் ரசிகர்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Biggboss tamil news fight between cibi and akshara in biggboss house

Next Story
பாகுபலி-2-வின் அடுத்த சாதனை… உலகளவில் 9,000 திரையரங்குகளில் ரிலீஸ்!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com