BIGGBOSS Tamil News: கடந்த 2017ம் ஆண்டு முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டு வரும் 'பிக் பாஸ்' ரியாலிட்டி ஷோவை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக கடந்த ஆண்டு தாமதமாக நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சி இந்த ஆண்டும் தாமதமாக நடத்தப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சிக்கான போட்டியாளர்கள் விறுவிறுப்பாக தேடப்பட்டு வந்த நிலையில், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் கமல் முழு நேர அரசியலில் ஈடுபட்டுள்ளதால் இந்த ஆண்டு நடக்கும் பிக் பாஸ் சீசன் 5-க்கு வரமாட்டார் என்ற பேச்சு அடிபட்டது. மேலும் நிகழ்ச்சியை நடத்தும் குழு நடிகர் கமலுக்கு பதில் சிம்பு உள்ளிட்ட வேறு சில நடிகர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் நமக்கு கிடைத்துள்ள தகவலின் படி பிக் பாஸ் சீசன் 5-யை நடிகர் கமல் தான் தொகுத்து வழங்க உள்ளார்.
சமீபத்தில் கமலின் மக்கள் நீதி மய்யத்திலிருந்து விலகி பிரபலம் இது குறித்து கூறுகையில், 'பிக் பாஸ் ஷோவுக்காக கமல் ஒரு பெரிய தொகையை அட்வான்ஸாக வாங்கினார். அதை நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்காக பயன்படுத்திவிட்டார்' என்றார். இதன் மூலம் கமல் நிச்சயம் பிக் பாஸ் சீசன் 5- யை தொகுத்து வழங்குவார் என்பது உறுதியாகி உள்ளது.
இந்த நிகழ்ச்சிக்காக கமல் ஒரு பெரிய தொகையை வாங்கியுள்ளார் என பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில், அது எவ்வளவு தொகை என்பது பலருக்கும் தெரியாத புதிராக இருந்தது. ஆனால் அந்த பெரிய தொகை 50 கோடிக்கு மேல் இருக்கலாம் என சினிமா வட்டாராங்கள் தெரிவிக்கின்றன. கமல் படத்தில் நடிக்க கூட இவ்வளவு தொகையை அட்வான்ஸாக வாங்கினது கிடையாது என பலர் ஆச்சாரியத்தில் மூழ்கியுள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " (https://t.me/ietamil)