பிக்பாஸ் நிகழ்ச்சி அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. 71 நாளை கடந்துள்ள பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில், பல முக்கிய திருப்பங்கள் இனி நிகழ இருப்பதாக பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட மோகன் வைத்யா, சாக்ஷி, அபிராமி மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர். அவர்களால் மேலும் பல குழப்பங்கள், திருப்பங்கள் ஏற்படும் என பார்வையாளர்கள் நினைத்துவருகின்றனர். கவினுக்கும், சாக்ஷிக்கும் முதலில் இருந்தே லடாய் இருந்தநிலையில், சாக்ஷியின் மீண்டும் வரவு, கவின் ஆர்மியினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
பிக்பாஸ் 72வது நிகழ்ச்சிக்காக 3 புரோமோக்கள் வெளியிடப்பட்டுள்ளன. முதல் புரோமோவில்,
இரண்டாவது புரொமோவில், வனிதா - லாஸ்லியா இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது காட்டப்படுகிறது. இதில் புதிய விஷயம் என்னவெனில் இம்முறை வனிதாவுடன் சேர்ந்துகொண்டு லாஸ்லியாவுடன் மோதுகிறார் ஷெரின். லாஸ்லியாவின் அரோகன்ஸ், ஆட்டிட்யூட் தன்னை மிகவும் காயப்படுத்துவதாக, புதிய விருந்தினர்களாக பிக் பாஸ் வீட்டிற்கு வந்திருக்கும் முன்னாள் போட்டியாளர்களான சாக்ஷி, அபிராமி மற்றும் மோகன் ஆகியோரிடன் புகார் அளிக்கிறார் ஷெரின். ஏனெனில் இன்றைய டாஸ்க்கில் அவர்கள் தான் நடுவர்கள் என்பது தெரிகிறது.
இந்த வாரம் ஷெரின் நாமினேட் செய்யப்பட்டுள்ளார். இதுவரையில் அவர் தான் குறைந்த ஓட்டுகள் வாங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே சாக்ஷியுடன் அவர் சேர்ந்திருப்பதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில் வனிதாவுடன் சேர்ந்து கொண்டு ஷெரின் இப்படி விளையாடுவது அவருக்கு தான் ரிஸ்க். என்ன இருந்தாலும் பிக் பாஸ் கையில் தானே எல்லோமே இருக்கு. நடப்பது நடக்கட்டும்.
"செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயே ஷெரின். வஞ்சகி வனிதா", என விமர்சித்துள்ளனர் கவின் ஆர்மியினர். அதாவது வனிதாவுடன் சேர்ந்ததால் தான் ஷெரினும் மாறிவிட்டார் என்கிறார்கள் பார்வையாளர்கள்....