/indian-express-tamil/media/media_files/2025/07/20/sunitha-umar-2025-07-20-18-35-24.jpg)
சுனிதா ஒரு பிரபலமான நடனக் கலைஞர் மற்றும் தொலைக்காட்சி பிரபலம் ஆவார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானார். பின்னர் பிக்பாஸ் தமிழ் சீசன் 8 இல் போட்டியாளராகக் கலந்து கொண்டார். அதேபோல உமைர் ஒரு மாடல் மற்றும் நடிகர் இவரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படத்திலும் இவர் நடித்துள்ளார். பின்னர் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 இல் கலந்துகொண்டார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான உமர் மற்றும் சுனிதா இடையேயான நட்பு குறித்து பல ஊகங்கள் நிலவி வந்தன. இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, இருவரும் தங்கள் உறவின் தன்மை குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளனர். இவர்கள் இருவரும் ரெட்நூல் யூடியூப் பக்கத்திற்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டு இருப்பது பற்றி பார்ப்போம்.
சுனிதா மற்றும் உமர் ஆகிய இருவரும் தங்கள் உறவை மிகவும் நல்ல நட்பு என்று வெளிப்படையாகக் கூறுகிறார்கள். உமரைப் பொறுத்தவரை, சுனிதா ஒரு துணையைப் போல இருப்பதாகவும், அவரிடம் எல்லாவற்றையும் பகிர முடியும் என்றும் குறிப்பிடுகிறார். சுனிதாவும் இந்த உறவு பெயரிடப்படாதது என்பதும், அதுவே சிறந்தது என்பதும் இருவரின் கருத்தாக இருக்கிறது.
உமர், சுனிதாவை அப்பாவி என்றும் கடினமான சூழ்நிலைகளிலும் சுனிதா மற்றவர்களுக்கு உதவுவதாகவும், ஆதரவளிப்பதாகவும் கூறினார். "அவர் அனைவருக்கும் உதவுகிறார், ஆதரவளிக்கிறார். அவர் உணர்ச்சி ரீதியாக நல்லவர், ஆனால் அதே நேரத்தில் உணர்ச்சி ரீதியாக பலவீனமானவர். என்னிடமோ அல்லது வேறு யாரிடமோ உணர்ச்சிவசப்படுகிறார்," என்று உமர் கூறுகிறார். மேலும், சுனிதா கடினமாக உழைக்கும் மக்களை விரும்புவதாகவும், உமர் மிகுந்த ஆர்வத்துடன் கடினமாக உழைப்பதாகவும் உமர் உணர்வதாக கூறினார்.
சுனிதாவும் உமருடன் ஒரு மிகவும் உணர்ச்சிபூர்வமான பிணைப்பை உணர்கிறார். அவர்கள் ஒருவரையொருவர் புரிந்துகொள்வதாகவும், அதுவே போதும் என்றும் சுனிதா கூறுகிறார். பிரபலங்கள் என்ற முறையில், வதந்திகளுக்கு ஆளாக நேரிடும் என்பதை இருவரும் ஒப்புக்கொள்கிறார்கள். இருப்பினும், தங்கள் உறவு குறித்து யாருக்கும் விளக்கம் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதில் அவர்கள் உறுதியாக இருப்பதாக கூறினார்.
"நாங்கள் எதற்கும் விளக்கம் அளிக்கத் தேவையில்லை. ஆனால் இறுதியில், இந்த பெண்ணுடன் எனது பிணைப்பு என்னவென்று எனக்குத் தெரியும்," என்று உமர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். "நாங்கள் வலுவாக இருக்கிறோம், நாங்கள் நண்பர்கள், எங்களுக்கு ஒரு நல்ல பிணைப்பு உள்ளது, அதுவே போதுமானது," என்று உமர் கூறினார். இந்த உறவு உண்மையோ அல்லது நட்போ எதுவாக இருந்தாலும், அது வெளிப்படையாகவே உள்ளது என்றும் அவர்கள் வலியுறுத்துகிறார்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.