பிக்பாஸ் நிகழ்ச்சியில் டிக்டாக் பிரபலம் ஜி.பி.முத்து செய்யும் முதல் நாளில் இருந்தே இணையத்தை ஆக்கிரமித்து வரும் நிலையில், தற்போது ஜி.பி.முத்து பற்றி நடிகை வனிதா வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே ரசிகர்கள் மட்டுமல்லாமல் நெட்டிசன்களும் ரொம்ப குஷியாவிடுவார்கள். அதற்கு காரணம் பிக்பாஸ் வீட்டில் நடக்கும் ஒரு சிறிய விஷயம் கூட ரசிகர்கள் மத்தியில் வைரலாக பேசப்படும். இதனால் எதிர்பார்ப்பு அதிகரித்த நிலையில், இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் முதல் நாளில் இருந்தே சண்டை சச்சரவுகள் தொடங்கிவிட்டது.
வழக்கத்திற்கு மாறாக பல புதுமுக போட்டியாளர்கள் பங்கேற்றுள்ள இந்நிகழ்ச்சியில், மக்களில் இருந்தும் சில பங்கேற்றுள்ளனர். அதே சமயம் கடந்த சீசனில் ஒரு திருங்கை பங்கேற்றது போல் இந்த சீசனிலும் ஒரு திருநங்கை பற்கேற்றுள்ளார். மேலும் அமுதவாணன், ரக்ஷிதா மகாலட்சுமி ராபர்ட உள்ளிட்ட சில பிரபலங்களும் உள்ளனர்.
ஆனால் எத்தனை பிரபலம் இருந்தாலும் எனக்கு கவலையில்லை என்பதுபோல், ஜி.பி.முத்து முதல் நாளில் இருந்தே ஸ்கோர் செய்து வருகிறார். அந்த வீட்டில் அவரை பிடிக்காத ஒரே ஜீவன் என்றால் அது சக டிக்டாக் பிரபலம் தனலட்சுமிதான். இதனால் இருவருக்குள்ளும் மோதல் இருந்துகொண்டேதான் இருக்கிறது. ஜி.பி.முத்து இறங்கி போனாலும் தனலட்சுமி இறங்குவதாக தெரியவில்லை.
ஆனாலும் பிக்பாஸ் வீ்ட்டில் ஜி.பி.முத்துக்கு அனைத்து போட்டியாளர்களும் சப்போர்ட்டாக உள்ளனர். இதனிடையே ஜி.பி.முத்து பற்றி முன்னாள் பிக்பாஸ் போட்டியாளரும் நடிகையுமாக வனிதா விஜயகுமார் கூறியுள்ள சில கருத்துக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இது குறித்து வனிதா விஜயகுமார் கூறுகையில்.
பொதுவாக நகைச்சுவை செய்து மக்களை சிரிக்க வைப்பதற்காக கலைஞர்கள் தங்கள் உயிரிரையும் கொடுக்க துணிவார்கள். மற்றவர்களை சிரிக்க வைக்கக்கூடிய திறமை ஒருவரிடத்தில் இருந்தால் மட்டுமே அதை செய்ய முடியும். அந்த வகையில், எந்த சினிமா பின்னணியும் இல்லாமல் ஜி.பி.முத்து இவ்வளவு மக்களை கவர்ந்துள்ளார் என்றால் உண்மையில் அவர் அறிவாளிதான். அவரை அப்பாவி என்று சொல்லாம் ஆனால் ஒன்றும் தெரியாதவர் என்று கூறிவிட முடியாது. கிராமத்தில் இருந்து வந்த ஒரு வெள்ளந்தியான மனிதனாகத்தான் அவர் தெரிகிறார். அவரை சக போட்டியாளர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளக்கூடாது. அதை நாள் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று கூறியுள்ளார்.
வனிதாவின் இந்த கருத்து வைரலாக பரவி வரும் நிலையில், ஜி.பி.முத்துவுக்கு ஆதரவாக ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.