Bigg Boss 3 Tamil : பிக்பாஸ் தமிழ் சீசன் 3 : இளசுகளுக்காக ஷெரீன், ரேஷ்மா….நடுத்தர வயதினருக்காக சேரன், பாத்திமா பாபு – உட்கார்ந்து யோசிச்சிருக்கான்யா விஜய் டிவி

Big boss 2019 tamil contestants : இரவு 8 மணியளவில் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என்பதால், சீரியல் தயாரிப்பாளர்களின் வயிற்றில் பிக்பாஸ் நிகழ்ச்சி நிச்சயம் புளியை கரைக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

Bigg Boss Tamil, Kamal Haasan, Star Vijay, bigg boss 3 contestant tamil, bigg boss 3, vijay tv live, bigg boss 3 tamil, sakshi agarwal, bigg boss tamil, big boss 2019 tamil contestants, vanitha vijayakumar, sherin, abhirami venkatachalam, fathima babu, mohan vaidya, bigg boss 3 tamil contestant, bigg boss tamil 3, பிக்பாஸ் தமிழ் 3, விஜய் டிவி, கமல்ஹாசன்
Bigg Boss Tamil, Kamal Haasan, Star Vijay, bigg boss 3 contestant tamil, bigg boss 3, vijay tv live, bigg boss 3 tamil, sakshi agarwal, bigg boss tamil, big boss 2019 tamil contestants, vanitha vijayakumar, sherin, abhirami venkatachalam, fathima babu, mohan vaidya, bigg boss 3 tamil contestant, bigg boss tamil 3, பிக்பாஸ் தமிழ் 3, விஜய் டிவி, கமல்ஹாசன்

Kamal Haasan’s bigg boss 3 tamil contestants out: பிக்பாஸ் தமிழ் சீசன் 3 கொண்டாட்டம் கோலாகலமாக துவங்கியுள்ளது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்க உள்ள இந்நிகழ்ச்சியில் தமிழ் மட்டுமல்லாது அண்டை நாடுகளை சேர்ந்த பிரபலங்களும் கலந்துகொள்ள உள்ளனர். இந்நிலையில், பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியில் இந்த நட்சத்திரங்கள் கலந்துகொள்ள உள்ளனர்

மேலும் படிக்க – Bigg Boss 3 Tamil Live Updates – பிக்பாஸ் சீசன் 3 தமிழ் லைவ் அப்டேட்ஸ் இதோ

நடிகை அபிராமி வெங்கடாச்சலம் ( அஜித் நடிப்பில் விரைவில் வெளிவரஉள்ள நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார்), நடிகர் மற்றும் இசைக்கலைஞர் மோகன் வைத்யா, காமெடி நடிகை மதுமிதா, வனிதா விஜயகுமார் ( நடிகர் விஜயகுமாரின் மகள்), நடிகர் பருத்திவீரன் சரவணன், மலேசிய நடிகர் மற்றும் இசைக்கலைஞர் முஜென் ராவ், நடன இயக்குனர் சாண்டி, சரவணன் மீனாட்சி சீரியல் பிரபலம் கவின், பாடகர் மோகித் கவுர், நடிகை பாத்திமா பாபு, சாக்ஷி அகர்வால், நடிகர்கள் சேரன் மற்றும் பவர்ஸ்டார் உள்ளிட்டோர் கலந்துகொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியானது

பிக்பாஸ் தமிழ் 3 நிகழ்ச்சிக்காக, விஜய் டிவி, எம்.எஸ்.பாஸ்கர், ஆல்யா மானசா, ராதாரவி, பிரேம்ஜி, டி.ராஜேந்தர், நடிகைககள் பிரியா ஆனந்த், கஸ்தூரி மற்றும் வீடியோ ஜாக்கி சித்து உள்ளிட்டோரையும் அணுகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் தமிழ் 3 நிகழ்ச்சியில் நம்மை மகிழ்விக்க போகும் அந்த 15 பிரபலங்கள் இவர்கள் தான்

1. நடிகை பாத்திமா பாபு : செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி, பின் சினிமாவில் நடித்து தற்போது தன்னை கட்சியில் இணைத்துள்ளார். பிக்பாஸ் தமிழ் 3 நிகழ்ச்சியில் முதல் பங்கேற்பாளர் இவர் தான்.

2. லாஸ்வியா : இவர் ஒரு பிரபலமான மாடல்

3. சாக்ஷி அகர்வால் : காலா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

4. மதுமிதா : நகைச்சுவை நடிகையாக பல படங்களில் நடித்துள்ளார். சின்னத்திரையிலும் இவர் நடித்துள்ளார்.

5. கவின் : விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான நட்புன்னா என்னன்னு தெரியுமா படத்திலும் நடித்திருந்தார்.

6. அபிராமி வெங்கடாச்சலம் : நடன கலைஞரான இவர், அஜித் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார்.

07. நடிகர் சரவணன் : ஹீரோ, குணசித்திர வேடம் என பல பல்வேறு கேரக்டர்களில் பல படங்களில் நடித்துள்ளார்.

08. வனிதா விஜகுமார் : நடிகர் விஜயகுமாரின் மகள் ஆவார். பல படங்களில் நடித்துள்ளார்.

09. சேரன் : இயக்குனராக இருந்து ஆட்டோகிராப் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர்.

10. நடிகை ஷெரீன் : துள்ளுவதோ இளமை படத்தின் மூலம், இளையதலைமுறையினரை துள்ள வைத்தவர். விசில், ஸ்டூடண்ட் நம்பர் 1 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

11. மோகன் வைத்யா : கர்நாடக இசைக்கலைஞரான இவர் அந்நியன், சேது உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

12. தர்ஷன் : இவர் இலங்கையை சேர்ந்த மாடல் கலைஞர்

13. சாண்டி : நடன இயக்குனர். சின்னத்திரையில் அறிமுகமாகி, திறமையால், தற்போது பல்வேறு படங்களில் நடன இயக்குனராக பணியாற்றி வருகிறார்.

14. முகன் ராவ் : இவர் மலேசியாவை சேர்ந்த மாடல்

15. ரேஷ்மா : மாடலிங் கலைஞரான இவர் சில படங்களில் நடித்து உள்ளார்.

100 நாட்கள், 60 கேமிராக்களின் கண்காணிப்பில் 16 திரை பிரபலங்கள் மற்றும் பொதுவாழ்வில் தொடர்புடையவர் ஒருவர் என மொத்தம் 17 பேர் வெளியுலக தொடர்பு இல்லாத ஒரு வீட்டினுள் இருந்து அவர்களின் தனிப்பட்ட தன்மை, விருப்பு வெறுப்பு உள்ளிட்ட காரணிகளால் நம்மை மகிழ்விக்க போகின்றனர்.

திங்கள் முதல் வெள்ளிக்கிழமை என வாரநாட்களில் 60 நிமிடங்கள் காலஅளவு கொண்ட நிகழ்ச்சியாகவும், சனி மற்றும் ஞாயிறு என வாரஇறுதி நாட்களில் 90 நிமிடங்கள் காலஅளவு கொண்ட நிகழ்ச்சியாக விஜய்டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. இரவு 8 மணியளவில் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என்பதால், சீரியல் தயாரிப்பாளர்களின் வயிற்றில் பிக்பாஸ் நிகழ்ச்சி நிச்சயம் புளியை கரைக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Biggboss3 tamil contestants vijay tv kamalhassan

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com