/tamil-ie/media/media_files/uploads/2019/09/Vivek-Clarifies-Bigil-Audio-Launch-Controversy.jpg)
Tamil Nadu News Today Live
Vivek Clarifies on Bigil Audio Launch Controversy: இந்தாண்டு தொடக்கத்தில், இயக்குநர் சிவா இயக்கத்தில் அஜித்துடன் விஸ்வாசம் படத்தில் நகைச்சுவை நடிகர் விவேக் நடித்திருந்தார். இதையடுத்து இந்த தீபாவளிக்கு வெளியாகும் ‘பிகில்’ படத்திலும் நடித்திருக்கிறார். இயக்குநர் அட்லீ இயக்கும் இந்தப் படத்தில் நடிகர் விஜய் கால்பந்தாட்ட பயிற்சியாளராக நடிக்கிறார்.
சமீபத்தில், பிகில் படத்தின் ஆடியோ வெளியீடு சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் விவேக் கூறிய கருத்துக்கள் சர்ச்சைக்குரியதாக மாறியது. அதாவது 1960-ஆம் ஆண்டில் சிவாஜி கணேசன் நடித்த ’இரும்புத் திரை’ திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த ’நெஞ்சில் குடியிருக்கும்’ என்ற பாடல், பெரிதாக பிரபலமடையவில்லை. ஆனால் விஜய் பாடியிருக்கும் இந்த ‘நெஞ்சில் குடியிருக்கும்’ பாடல் வேற லெவலில் பிரபலமடைந்திருக்கிறது என்றார்.
1960ல் இரும்புத்திரை படத்தில் நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் பாடிய பாடலின் முதல் வரி“நெஞ்சில் குடி இருக்கும்”. அப்போது அது காதல் உணர்வைக் குறித்தது.ஆனால் இப்போது சகோ விஜய் அதை சொல்லும் போது மந்திர சக்தி வார்த்தையாக இருக்கிறது.இதுவே நான் பேசியது.அன்பு உள்ளங்கள் புரிந்து கொள்க.
— Vivekh actor (@Actor_Vivek) September 25, 2019
நடிகர் திலகம் சிவாஜி கணேசனை இழிவுப் படுத்தும் விதமாக விவேக் பேசியது கண்டிக்கத் தக்கது என, சிவாஜியின் ரசிகர்கள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வந்தனர். இந்நிலையில், ”நெஞ்சில் குடியிருக்கும் பாடல், அப்போது காதல் உணர்வைக் குறித்தது. ஆனால் இப்போது சகோ விஜய் அதை சொல்லும் போது மந்திர சக்தி வார்த்தையாக இருக்கிறது” என தன் கருத்துக்கு விளக்கமளித்துள்ளார் விவேக்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.