பிகில் ஆடியோ லாஞ்ச் சர்ச்சை: விளக்கம் கொடுத்த விவேக்!

Bigil Audio Launch: சகோ விஜய் அதை சொல்லும் போது மந்திர சக்தி வார்த்தையாக இருக்கிறது. இதுவே நான் பேசியது. அன்பு உள்ளங்கள் புரிந்து கொள்க.

Tamil Nadu News Today Live
Tamil Nadu News Today Live

Vivek Clarifies on Bigil Audio Launch Controversy: இந்தாண்டு தொடக்கத்தில், இயக்குநர் சிவா இயக்கத்தில் அஜித்துடன் விஸ்வாசம் படத்தில் நகைச்சுவை நடிகர் விவேக் நடித்திருந்தார். இதையடுத்து இந்த தீபாவளிக்கு வெளியாகும் ‘பிகில்’ படத்திலும் நடித்திருக்கிறார். இயக்குநர் அட்லீ இயக்கும் இந்தப் படத்தில் நடிகர் விஜய் கால்பந்தாட்ட பயிற்சியாளராக நடிக்கிறார்.

சமீபத்தில், பிகில் படத்தின் ஆடியோ வெளியீடு சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் விவேக் கூறிய கருத்துக்கள் சர்ச்சைக்குரியதாக மாறியது. அதாவது 1960-ஆம் ஆண்டில் சிவாஜி கணேசன் நடித்த ’இரும்புத் திரை’ திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த ’நெஞ்சில் குடியிருக்கும்’ என்ற பாடல், பெரிதாக பிரபலமடையவில்லை. ஆனால் விஜய் பாடியிருக்கும் இந்த ‘நெஞ்சில் குடியிருக்கும்’ பாடல் வேற லெவலில் பிரபலமடைந்திருக்கிறது என்றார்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனை இழிவுப் படுத்தும் விதமாக விவேக் பேசியது கண்டிக்கத் தக்கது என, சிவாஜியின் ரசிகர்கள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வந்தனர். இந்நிலையில், ”நெஞ்சில் குடியிருக்கும் பாடல், அப்போது காதல் உணர்வைக் குறித்தது. ஆனால் இப்போது சகோ விஜய் அதை சொல்லும் போது மந்திர சக்தி வார்த்தையாக இருக்கிறது” என தன் கருத்துக்கு விளக்கமளித்துள்ளார் விவேக்.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bigil audio launch controversy vivek clarifies

Next Story
இது வெடிக்கிற திரியா ..? டிரைலர் எப்படி?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com