Bigil Audio Launch: விஜய்- நயன்தாரா நடிப்பில் வெளியாக இருக்கும் பிகில் படத்தின் ஆடியோ லாஞ்ச், இன்று (செப்.19) சென்னை சாய்ராம் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடக்கிறது. பிரமாண்ட மேடையில் நடைபெறும் இந்த விழாவில் படத்தின் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் படக் குழுவினர் கலந்து கொள்கிறார்கள்.
பிகில் ஆடியோ லாஞ்ச் பின்னணி தகவல்கள்:
விஜய் நடிப்பில் பெண்கள் கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி தயாராகும் படம் பிகில். இதன் இயக்குனர் அட்லீ. ஏ.ஜி.எஸ் எண்டெர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்தப் படத்தில் விஜய்யுடன் இணைந்து, நயன்தாரா, கதிர், ஜாக்கி ஷெராஃப், டேனியல் பாலாஜி, விவேக், யோகி பாபு, ஆனந்தராஜ், ரெபா மோனிகா ஜோன், இந்துஜா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்தின் பாடல்களை, பாடலாசிரியர் விவேக் எழுத, இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான் இசை அமைத்திருக்கிறார்.
இந்தப் படத்தில் ரஹ்மான் பாடியுள்ள ‘சிங்கப்பெண்ணே’ பாடல் முதல் சிங்கிளாக வெளியிடப்பட்ட நிலையில், அதைத் தொடர்ந்து விஜய் பாடியிருக்கும், ‘வெறித்தனம்’ பாடல் சில வாரங்களுக்கு முன் வெளியானது. ரஹ்மான் இசையில் விஜய் பாடியிருக்கும் முதல் பாடலான இது, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. பின்னர் ‘உனக்காக’ எனத் தொடங்கும் மெலடி பாடல் நேற்று மாலை வெளியிடப்பட்டது.
இதற்கு முன்பு விஜய் – அட்லீ – ரஹ்மான் கூட்டணியில் அமைந்த மெர்சல் படத்தில் இடம் பெற்றிருந்த ‘நீ தானே நீ தானே’ பாடலைப் போன்று அன்பை உணர்த்தும் விதத்தில் ‘உனக்காக’ பாடல் இருப்பதால், பல ஜோடிகளின் ப்ளே லிஸ்டில் இப்பாடல் இடம் பிடித்திருக்கிறது.
இந்நிலையில் இன்று மாலை, சாய்ராம் பொறியியல் கல்லூரியில் விஜய்யின் ‘பிகில்’ பட ஆடியோ லாஞ்ச் விழா நடக்கிறது. இந்த இசைவெளியீட்டு விழாவில், ’பிகில்’ படத்தில் இடம்பெற்ற பாடல்களை ரஹ்மான் இசையில், மேடையில் பாடி அசத்த உள்ளனர் பாடகர்கள். இந்த நிகழ்ச்சியின் லைவ் அப்டேட்கள் இங்கே:
Live Blog
Bigil Audio Launch Live: விஜய் நடிப்பில் பெண்கள் கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி தயாராகும் படம் பிகில். இதன் இயக்குனர் அட்லீ.
விஜய் பேசுகையில், வாழ்க்கை கூட ஒரு கால்பந்தாட்ட விளையாட்டு போல்தான். நாம கோல்போட முயற்சிப்போம். ஆனால் அதை தடுக்க ஒரு கூட்டமே இருக்கும். யார சந்தோசபடுத்த ஆன்லைன்ல சண்டை போடுறீங்களோ அவங்களுக்கே உங்கள பிடிக்காம போயிடும் என்று கூறினார். பிறகு, பிகில் படக்குழுவினர் மேடையில் படத்தின் ஆடியோவை வெளியிட்டனர்.
விஜய் பேசுகையில், ஒருமுறை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் கார்ல போகும்போது ஒரு அமைச்சர் கலைஞரைப் பற்றி தவறாக பேசியுள்ளார். உடனடியாக எம்.ஜி.ஆர். அந்த அமைச்சரை காரைவிட்டு இறங்க சொல்லி இருக்கிறார். எதிரியாக இருந்தாலும் மதிக்கனும். அரசியலில் புகுந்து விளையாடுங்க. ஆனால், விளையாட்டில் அரசியலைக் கொண்டுவராதீர்கள்.
நான் வெற்றிமாறனுக்காக ஒரு சாம்பிள் டிராக் பாடினேன். அதை ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அனுப்பிவைத்தேன். ஆனால், அவர் மும்பையில் இருந்தார். அவர் மறந்துவிட்டு இருப்பார் என்று நினைத்தேன். ஆனால், பிறகு அட்லீ என்னைக் கூப்பிட்டு ஏ.ஆர்.ரஹ்மான் சார் உங்களை ரெக்கார்டிங்குக்கு கூப்பிடுகிறார் என்று கூறினார். அது எனக்கு சர்ப்பிரைஸாக இருந்தது. அதற்கு அட்லீ என்னை உற்சாகப்படுத்தினார்.
விஜய் பேசுகையில், சுடசுட ஆவி பறக்கும் அது இட்லி ஆனாலும் சரி அட்லி ஆனாலும் சரி என்று பஞ்ச்சுடன் தொடங்கினார்.
'Suda suda aavi parakkum, adhu idli aanalum seri, Atlee aanalum seri'
When all others speak pages and pages about the film and the team, #ThalapathyVijay wins it over with semmamaxx punch lines. Mass! #BigilAudioLaunch
— #BIGIL (@BigilOfficial) September 19, 2019
இயக்குனர் அட்லீ பெசுகையில், பெரும்பாலும் நாங்கள் எல்லோருமே ஒரே வயதுடையவர்கள்தான். ஆனாலும், அவர்கள் என்னுடைய குழந்தைகள் மாதிரிதான். அவர்கள் அக்னி நட்சத்திர வெயிலில் 45 நாட்கள் கால்பந்து விளையாடினார்கள்.
இயக்குனர் அட்லீ பேசுகையில், ‘மெர்சலுக்கு பிறகு நிறைய பெரிய வாய்ப்புகள் வந்தன. ஆனால் எங்க அண்ணனை (விஜய்) விட்டுட்டு போக மனசு வரலை. அவர் எது சொன்னாலும் சரியா இருக்கும். அதனால நான் அதிகமா பேச மாட்டேன். சரிண்ணா, ஓகேண்ணான்னு சொல்றதோட சரி.
இந்தப் படத்துல ஒவ்வொண்ணையும் பார்த்து பார்த்து பண்ணிருக்கேன். எங்க அண்ணனுக்கு அப்படித்தான் பண்ணுவேன்’ என்றார்.
அர்ச்சனா கல்பாத்தி, விஜய் ரசிகர்களுக்கு பரிச்சயமான பெயர். தன்னை விஜய் ரசிகையாக பகிரங்கமாக அறிவித்துக் கொண்ட இவர், படத்தின் கிரியேட்டிவ் புரடியூசர். பிகில் அப்டேட்களை அவ்வப்போது தனது சமூகவலைதளப் பக்கத்தில் ரிலீஸ் செய்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருபவர் இவர்தான்.
The creative producer of #Bigil, the talented @archanakalpathi at the #BigilAudioLaunch 🔥 pic.twitter.com/T1owa2EBzO
— Sony Music South (@SonyMusicSouth) September 19, 2019
ஆடியோ லாஞ்ச் மேடையில் ஏறிய அர்ச்சனா கல்பாத்தி, ‘வரலாறு அடிப்படையான படங்களுக்கு பாகுபலி எப்படி ‘கேம் சேஞ்சராக’ இருந்ததோ, அதேபோல விளையாட்டு அடிப்படையிலான படங்களுக்கு பிகில் ‘கேம் சேஞ்சராக’ இருக்கும்’ என்றார்.
ஏ,ஆர்.ரஹ்மான் மேடைக்கு வந்தபோது, ஒளிவிளக்குகள் அணைத்து போடப்பட்டன. விளக்குகள் ஒளிர்ந்ததும், பிகில் படத்தில் இடம் பெற்ற பாடல்களை பாடினர். உனக்காக எனத் தொடங்கும் மெலோடி ரசிகர்களை தாலாட்டியது. மாதரே எனத் தொடங்கும் பாடலை முழுக்க பெண் பாடகிகள் பாடினர்.
#UnakagaMelody ♥️#BigilAudioLaunch pic.twitter.com/A1Z1uCWJxW
— Sony Music South (@SonyMusicSouth) September 19, 2019
பிகில் படத்தில் கால்பந்து வீராங்கனைகளாக நடித்திருக்கும் சிங்கப் பெண்கள் 10 பேர் ஆடியோ லாஞ்ச் மேடையில் ஏற்றப்பட்டனர். அவர்கள் கூறுகையில், ‘இந்த படம் வெளிவந்த பிறகு கால்பந்து விளையாட நிறைய பெண்கள் வருவார்கள். படத்தை பார்க்க ஆவலாக உள்ளோம்!’ என்றார்கள்.
நடிகர் விவேக் தொடர்ந்து பேசுகையில், ‘நான் ஏழெட்டு படங்களாக விஜய்யை பார்க்கிறேன். அப்படியே இருக்கிறார். வெற்றி பொதுவாக ஒரு போதையைக் கொடுக்கும். அது விஜய்யின் தலையில் ஏறியதே இல்லை’ என்றார். விவேக் பேச்சு ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் விவேக் பேசுகையில், ‘நான் இங்கு வரும் வழியில் 3 மணி நேரம் டிராபிக்கில் சிக்கினேன். வெளியே அவ்வளவு கூட்டம் நிற்கிறது. என்ன மாஸுங்க விஜய் தம்பிக்கு..!’ என நெகிழ்ந்து குறிப்பிட்டார்.
Actor @Actor_Vivek Sir At #Bigil Audio Launch Function🥁🥁🥁#BigilAudioLaunch pic.twitter.com/gLhkj1mBg5
— VIJAY FANS CLUB (@vijayfansclub4) September 19, 2019
இந்தப் படத்திற்காக இயக்குனர் அட்லீ 200 சதவிகித உழைப்பை வழங்கியிருப்பதாகவும், பல நாட்கள் இரவில் தனது காரிலேயே அவர் படுத்து தூங்கியதாகவும் நடிகர் கதிர் குறிப்பிட்டார்.
It's a proud to be father and mother😎😍😘 #ThalapathyEntry #BigilAudioLaunch #BigilPodalamaa pic.twitter.com/nIUBQtmxu3
— Abdul wasim (@Thalapathywasim) September 19, 2019
பாடல் ஆசிரியர் விவேக் பேசுகையில், படத்தில் சிங்கப் பெண்களுக்கு மத்தியில் சிங்கமாக விஜய் வாழ்ந்திருப்பதாக குறிப்பிட்டார். கால்பந்தாட்ட மைதானம் செட் அமைத்து விழா நடைபெறும் முதல் நிகழ்ச்சி இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
எடிட்டர் ஆண்டனி ரூபன் பேசுகையில், ‘ஒவ்வொரு டெக்னீசியனும் முழு உழைப்பை கொடுத்திருக்கிறோம். உங்களின் ரெஸ்பான்ஸை எதிர்பார்த்திருக்கிறோம்’ என ரசிகர்களை நோக்கி சொல்ல, ஹோ..வென ஒரே சத்தம்!
#BigilAudioLaunch
Finally king arrived 😍😍 pic.twitter.com/yxiBFevnwa— 𝓑𝓲𝓰𝓲𝓵 Joseph Suhasini (@Suhasinichen) September 19, 2019
பிகில் படத்தின் வசனகர்த்தா ரமணா கிரிவாசன் பேசுகையில், ‘நான் எழுதிய சாதாரண டயலாக்கள் விஜய் பேசியதும் பஞ்ச் டயலாக்கள் ஆகிவிட்டன’ என்றார். ஆக, செம பஞ்ச் இருப்பது உறுதி ஆகியிருக்கு!
Cute Pair ThalapathVijay Anna and Sangeetha Anni ❤💯#Bigil #BigilAudioLaunch pic.twitter.com/4IQJIVcVqG
— Bangalore Tamil Pasanga ™ (@BTP_Offl) September 19, 2019
படத்தின் ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணு பேசுகையில், ‘இந்தப் படத்தில் விஜய் ஆடியிருக்கிற ஆட்டமே வேற’ என ரசிகர்களை உசுப்பேற்றினார். இந்தப் படத்தின் பிரி புரடக்ஷன் வேலைகள் ஹாலிவுட்டில் நடைபெற இருப்பதாக தெரிவித்து எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்தினார் அவர்.
6.15 PM: கருப்பு வண்ண பேண்ட், கருப்புச் சட்டை, ட்ரிம் தாடியுடன் மெர்சலாக வந்தார் விஜய். அரங்கம் அதிர ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். அரங்கம் திணறும் அளவுக்கு கூட்டம் எகிறியிருக்கிறது.
Hairdo is amazing 😍🔥
He changed his wrist band to bracelet kind of.. !!
Asusual his beard with those silver linings 🔥😎#BigilAudioLaunch #BigilAudioLaunchDayOh God Thanks @Dir_Lokesh nanba 😎🔥
Thalaivan pathukitey irukalaam polaaa ♥ pic.twitter.com/cbt8c85a9H— Vipin Raj (@Vipin_Offl) September 19, 2019
இந்தப் படத்தில் ரஹ்மான் பாடியுள்ள ‘சிங்கப்பெண்ணே’ பாடல் முதல் சிங்கிளாக வெளியிடப்பட்ட நிலையில், அதைத் தொடர்ந்து விஜய் பாடியிருக்கும், ‘வெறித்தனம்’ பாடல் சில வாரங்களுக்கு முன் வெளியானது. ரஹ்மான் இசையில் விஜய் பாடியிருக்கும் முதல் பாடலான இது, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. பின்னர் ‘உனக்காக’ எனத் தொடங்கும் மெலடி பாடல் நேற்று மாலை வெளியிடப்பட்டது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights