Advertisment

Bigil Audio Launch: விஜய் ரசிகர்களே அடுத்த கொண்டாட்டத்துக்கு ரெடியாகுங்க!

Thalapathy Vijay: புலி, மெர்சல், சர்கார் உள்ளிட்ட ஆடியோ வெளியீட்டு விழாக்களில் விஜய் பேசியவை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Bigil Audio Launch

நடிகர் விஜய், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்

Bigil Audio Launch: தீபாவளிக்கு வெளியான ’சர்கார்’ படத்தைத் தொடர்ந்து, நடிகர் விஜய் தற்போது ‘பிகில்’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். ’தெறி’, ‘மெர்சல்’ ஆகியப் படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜய் - அட்லீ கூட்டணி ‘பிகில்’ படத்தில் இணைந்துள்ளது. ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். மெர்சல், சர்காரை தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மானும் இதில் மீண்டும் விஜய்யுடன் இணைந்துள்ளார்.

Advertisment

Bigil Update: விஜய்யின் பிகில் படத்தில் நிஜ கால் பந்தாட்ட வீரர்!

பெண்கள் கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி இயக்கப்படும் ’பிகில்’ படத்தில் அப்பா – மகன் என இரு வேடங்களில் நடிக்கிறார் விஜய். அவருடன் விவேக், நயன்தாரா, கதிர், இந்துஜா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் விஜய்யின் பிறந்தநாளன்று வெளியாகி ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியது.

இந்நிலையில் பிகில் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், விவேக்கின் வரிகளில் விஜய் ‘வெறித்தனம்’ என்ற பாடலை பாடியிருக்கும் செய்தியும் வெளியாகி, ரசிகர்களை குஷிப்படுத்தியது.

இதற்கிடையே தீபாவளிக்கு இப்படம் வெளியாகும் என முன்பே அறிவிக்கப்பட்டு விட்டது. இந்நிலையில் சுதந்திர தினத்தன்று இதன் பாடல்களை வெளியிட படக்குழுவினர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆகஸ்டில் பாடல், செப்டம்பரில் ட்ரைலர், அக்டோபரில் படம் என்பது அட்லீயின் கணக்கு. இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

புலி, மெர்சல், சர்கார் உள்ளிட்ட ஆடியோ வெளியீட்டு விழாக்களில் விஜய் பேசியவை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன. அந்த வகையில் ‘பிகில்’ ஆடியோ வெளியீட்டு விழாவில் அவர் பேசுவதை காண இப்போதே தயாராகிவிட்டனர் ரசிகர்கள்.

A R Rahman Atlee Thalapathy Vijay
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment