ஏஜிஎஸ் தயாரிப்பில் அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்த பிகில் திரைப்படம்ம் கடந்த அக்.25ம் தேதி வெளியானது. குடும்பத்துடன் தியேட்டருக்கு சென்று துளி ஆபாசம் இல்லாமல், விரச காட்சிகள் இல்லாமல் குழந்தை குட்டிகளுடன் என்ஜாய் செய்ய வேண்டிய தரமான படம் பிகில் என்று நிச்சயம் கூறலாம். ஆனால், லாஜிக் பற்றி உங்கள் மூளை ஒரு பெர்சன்ட் கூட யோசித்து விடக் கூடாது. அப்படி யோசித்தால், கம்பெனி பொறுப்பல்ல!.
பிகில் ரிலீஸுக்கு முன், ட்விட்டரில் மெகா புரமோஷன் நடத்தி, விஜய் ரசிகர்களை ஒவ்வொரு தினமும், பிகில் பிகில் என்று தூக்கத்தில் கூட நினைக்க வைத்து சாதித்துக் காட்டியவர் அர்ச்சனா கல்பாத்தி… புரியும்படி சொல்ல வேண்டுமெனில் அச்சு அக்கா (அ) அச்சு…
பிகில் பட செட்டில் புளி சாதம் போட்டால் கூட, அதற்கு ஒரு ட்வீட் போட்டு, பிகில், சிங்கப்பெண்ணே, வெறித்தனம் என்று புள்ளைங்களை சாமியாட வைத்தவர், படம் ரிலீஸுக்கு பிறகு கப்சிப் மோடில் இருக்கிறார்.
ரசிகர்கள் விடுவார்களா…! படம் ரிலீசாகி கிட்டத்தட்ட 10 நாட்கள் ஆகிவிட்டதால், தங்களை சீண்டும் தல ரசிகர்களுக்கு தளபதியின் பலத்தை நிரூபிக்க, புள்ளிங்கோ வசூல் விவரம் குறித்து அச்சு மேடத்தை நச்சரித்து வருகின்றனர்.
Bo collectoin ???? pic.twitter.com/gcve8LRR2L
— THALAPATHY MY LIFE (@Kuttai_Pottai) November 3, 2019
Akka online vanthuteenga …box office collection kodunga
— Mohammed Aathil (@aathil2000) November 3, 2019
சில தளபதி வெறியர்கள் ஒருபடி மேல் சென்று, பிகில் 200 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக அவர்களாகவே சமூக ஊடகங்களில் செய்திகளை உலவ விட, உண்மையாக பாக்ஸ் ஆபீஸ் வசூல் எவ்வளவு என்பதை தயாரிப்பாளர் தரப்பு விரைவில் வெளியிட வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
— Abilash Sharp (@sharp_abilash) November 3, 2019
பிகில் படத்திற்கு போதிய வரவேற்பு இல்லாததால், சில தியேட்டர்களில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளிவந்து கொண்டிருந்தது. குறிப்பாக, சென்னை தேவி பாரடைஸ் தியேட்டரில் பிகில் படத்திற்கு முன்பதிவு செய்யப்பட்ட மதிய காட்சி திடீரென ரத்து செய்யப்பட்டு, டிக்கெட் வாங்கியவர்களை தேவி தியேட்டருக்கு மாற்றியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
பிகில் படத்தை வாங்கி வெளியிட்ட வகையில் ரூ.40 கோடி வரை இழப்பு ஏற்படும் என்றும் தகவல் வெளியானது. இவை அனைத்துமே உறுதிப்படுத்தப்படாத செய்தி தான்.
எது எப்படியோ, படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத வரை, சமூக தளங்களில் பரவும் வசூல் தகவல்கள் அனைத்து தவறானவையே.
புள்ளிங்கோ வெறித்தன வெயிட்டிங் அக்கா… சீக்கிரம் ஒரு போஸ்ட்டை போடுங்க!.