பிகில்: ரஜினியின் படத்துக்குப் பிறகு அதிக பொருட்செலவில் உருவாகியிருக்கும் விஜய் படம்!

Bigil Trailer: மக்கள் படத்தைப் பார்க்க ஆர்வமாக உள்ளது புரிகிறது, ஆனால், அதற்காக டைரக்‌ஷன் டீமுக்கு அழுத்தம் கொடுப்பது சரியல்ல

Bigil Budget thalapathy vijay, 2.0, superstar rajinikanth
Bigil

Bigil Budget: இந்தாண்டின் மிகப்பெரிய படங்களில் ஒன்றான நடிகர் விஜய் நடித்திருக்கும் ’பிகில்’ திரைப்படம் அதன் தொடக்கத்திலிருந்தே அதிர்வலைகளை எழுப்பி வருகிறது.

சில மாதங்களுக்கு முன்பு, படத்தின் தயாரிப்பாளர்கள் ’பிகில்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டனர். இது விஜய் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற ‘பிகில்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா, திரைப்பட பார்வையாளர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அட்லீ இயக்கியிருக்கும் பிகில் திரைப்படம் பெண்கள் கால் பந்தாட்டத்தை மையப்படுத்தி இயக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகும் நிலையில், தற்போது ஒரு சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அக்‌ஷய் குமார் நடித்த 2.0 படத்திற்குப் பிறகு தமிழ் சினிமாவில் வெளியாகும் ’பிகில்’ அதிக பட்ஜெட்டில் வெளியாகும் படமாம். ஆம்! கடந்தாண்டு வெளியான 2.0, 543 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டது. இந்நிலையில் பிகில் திரைப்படம் 180 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இதற்கிடையில், தாமதமாகிவிட்ட பிகிலின் டிரெய்லருக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். சமீபத்தில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அளித்த பேட்டியில், ”ஒரு தயாரிப்பு நிறுவனத்திற்கு மட்டும் அப்டேட்டைக் கொடுக்கும் உரிமை இல்லை. இது அனைத்தும் டைரக்‌ஷன் டீமின் கைகளில் உள்ளது. எல்லாம் தயாராக உள்ளது என்று அவர்கள் கூறும்போது, எங்களால் அப்டேட்டைக் கொடுக்க முடியும். மக்கள் படத்தைப் பார்க்க ஆர்வமாக உள்ளது புரிகிறது, ஆனால், அதற்காக டைரக்‌ஷன் டீமுக்கு அழுத்தம் கொடுப்பது சரியல்ல” என்றார்.

Web Title: Bigil budget thalapathy vijay 2 0 superstar rajinikanth

Next Story
2 மில்லியன் பார்வையாளர்களை ஈர்த்த கார்த்தியின் ’கைதி’ ட்ரைலர்!Kaithi Trailer reaction, karthi lokesh kanagaraj
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express