/tamil-ie/media/media_files/uploads/2019/09/Verithanam-sets-new-record.jpg)
பிகில்
Bigil Release Date: 2017-ல் ’மெர்சல்’, 2018-ல் ’சர்கார்’, 2019-ல் ‘பிகில்’ என ஹாட்ரிக்காக, ரசிகர்களுக்கு தீபாவளி ட்ரீட் கொடுத்து வருகிறார் நடிகர் விஜய். ”தெறி”, ”மெர்சல்” ஆகியப் படங்களுக்குப் பிறகு விஜய்யும் அட்லியும் “பிகில்” படத்தின் மூலம் மூன்றாவதாக இணைந்துள்ளனர்.
#Bigil Censor formalities are done. We will be announcing the release date soon. Thank you for all your love and support. #BigilTrailer has crossed 2 million likes ♥️♥️@Ags_production@actorvijay@Atlee_dir@arrahman#Nayanthara#BigilDiwali ????
— Archana Kalpathi (@archanakalpathi) October 16, 2019
ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்தப் படத்தில், விஜய்யுடன் இணைந்து விவேக், நயன்தாரா, கதிர், இந்துஜா, அம்ரிதா, வர்ஷா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். படத்திற்கு இசை இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்.
இந்த தீபாவளிக்கு பிகிலுடன் வெளியாகும் மற்றொரு திரைப்படம் கார்த்தி நடித்த ‘கைதி’. யு / ஏ சான்றிதழ் பெற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கும் இப்படம் அக்டோபர் 26-ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே பிகில் படத்தின் சென்சார் விபரங்கள், வெளியாகும் தேதி ஆகியவை அறிவிக்கப்படாமல் இருந்தன.
இந்நிலையில், பிகில் படத்தின் சென்சார் நடைமுறைகள் முடிந்துவிட்டதாகவும், விரைவில் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என்றும் படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ட்விட்டரில் அறிவித்துள்ளார். அதோடு ‘பிகில்’ ட்ரைலர் 2 மில்லியனுக்கும் அதிகமான லைக்குகளைப் பெற்றிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆக, ஓரிரு தினங்களில் பிகில் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.