Advertisment

பிகில் முதல் நாள் வசூல் - அதிரும் சென்னை பாக்ஸ் ஆபீஸ்

ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் முதல் நாளில் 4.2 கோடி வசூல் செய்துள்ளது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
bigil chennai 1st day box office vijay thalapathy atlee - பிகில் முதல் நாள் வசூல் - அதிர்ந்த சென்னை பாக்ஸ் ஆபீஸ்

bigil chennai 1st day box office vijay thalapathy atlee - பிகில் முதல் நாள் வசூல் - அதிர்ந்த சென்னை பாக்ஸ் ஆபீஸ்

’தெறி’, ‘மெர்சல்’ ஆகியப் படங்களைத் தொடர்ந்து நடிகர் விஜய்யுடன் – இயக்குநர் அட்லீ மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் திரைப்படம் ‘பிகில்’. இதனை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. பெண்கள் கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு, கதிர், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்திற்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான். இப்படம் தீபாவளி ஸ்பெஷலாக நேற்று வெள்ளிக்கிழமை (அக்டோபர் 25) ரிலீசானது.

Advertisment

படத்திற்கு இரு விதமான விமர்சனம் கிடைத்துள்ளன. விஜய், பிரம்மாண்டம், ரஹ்மான் பின்னணி இசை ஆகியவை பலம் என்றால், மிக சுமாரான திரைக்கதை. பார்த்து பார்த்து பழகிப் போன கதை, 3 மணி நேர நீளம், நயன்தாரா காதல் காட்சிகள் போன்ற தேவையில்லாத ஆணிகள் படத்தின் மைனஸ் என்று கூறப்படுகிறது.

வசூலைப் பொறுத்தவரை, முதல் நாளில் சென்னை பாக்ஸ் ஆபீஸில், 1.80 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம், முதல் நாள் சென்னை பாக்ஸ் ஆபிஸில் '2.0' , 'சர்கார்' படங்களுக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது பிகில்.

அதேபோல், ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் முதல் நாளில் 4.2 கோடி வசூல் செய்துள்ளது. சர்கார் இதற்கு முன்னதாக, ஆந்திரா/நிஜாம் கோட்டையில் 3.89 கோடி வசூல் செய்ததே அதிகபட்சமாக இருந்தது.

வெளிநாடுகளிலும் பிகில் வசூலைக் குவித்து வருகிறது. அதிகாரப்பூர்வ வசூல் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Actor Vijay
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment