Advertisment

Bigil vs Tamilrockers: மாஸ் ஹீரோக்களின் படங்களுக்கு வில்லனாக மாறிய தமிழ் ராக்கர்ஸ்

Bigil Tamil Movie vs Tamilrockers: தமிழ் ராக்கர்ஸின் திருட்டையும் மீறி பிகிலை விஜய் ரசிகர்கள் ஜெயிக்க வைப்பார்கள் என்றே திரையுலகம் நம்புகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Bigil Full Movie Download Tamilrockers, Bigil Tamil Movie, Bigil Tamil Movie Online Watch, பிகில், பிகில் ஃபுல் மூவி, தமிழ் ராக்கர்ஸ்

Bigil Full Movie Download Tamilrockers, Bigil Tamil Movie, Bigil Tamil Movie Online Watch, பிகில், பிகில் ஃபுல் மூவி, தமிழ் ராக்கர்ஸ்

Tamilrockers Threat To Bigil Tamil Movie: பிகில் படத்திற்கு தமிழ் ராக்கர்ஸின் மிரட்டல் இருக்கிறது. இது போன்ற பெரிய பட்ஜெட் படங்களை தமிழ் ராக்கர்ஸ் சூறையாடுவதால், பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷன் தொடர்பான கவலை படத் தயாரிப்பாளர்கள் தரப்புக்கு ஏற்பட்டிருக்கிறது.

Advertisment

விஜய் படம் என்றாலே, சர்ச்சைகளுடன் ரிலீஸாவது தமிழ் திரையுலகில் எழுதப்படாத விதி. இதற்கு தீபாவளியையொட்டி வெள்ளிக்கிழமை (இன்று) வெளியான பிகிலும் விலக்கல்ல. படத்தின் ஆடியோ லாஞ்ச் அன்று, ‘யாரை எங்கே வைக்கணுமோ, அங்கே வைக்காததுதான் பிரச்னை’ என விஜய் பேசிய அரசியல் பஞ்ச் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையே படம் ரிலீஸுக்கு முன் தினமான நேற்று தமிழ் நாடு செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, ‘பிகில், கைதி திரைப்படங்களுக்கு சிறப்புக் காட்சிகளுக்கு தமிழ்நாடு அரசிடம் அனுமதி பெறவில்லை. எனவே சிறப்புக் காட்சிகள் திரையிடப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்’ என அறிவித்தார். இதனால் தயாரிப்பாளர் தரப்பு மிரண்டது.

காரணம், பிகில் 180 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட மெகா பட்ஜெட் படம். சிறப்புக் காட்சிகள், கூடுதல் கட்டணம் உள்பட முதல் வார கலெக்‌ஷனை வைத்தே தயாரிப்பாளர் தரப்பு நஷ்டம் இல்லாமல் தப்ப முடியும். பிறகு எப்படியோ பேச்சுவார்த்தைகளை நடத்தி முதல் நாள் மட்டும் சிறப்புக் காட்சிகளை நடத்த அரசிடம் அனுமதி பெற்றிருக்கிறார்கள். கைதி படத்திற்கும் இது பொருந்தும்.

அந்த சிக்கலை முடித்து நிமிர்வதற்குள் ஆன்லைன் மிரட்டல் காத்திருக்கிறது. பிகில் படம் இன்று அதிகாலை தியேட்டர்களில் ரிலீஸ் ஆனது. தியேட்டர்களில் திருட்டுத்தனமாக இந்தப் படத்தை காபி செய்வதைத் தடுக்க தயாரிப்பு தரப்பும், விஜய் தரப்பும் பல்வேறு முன்னேற்பாடுகளை செய்திருக்கிறார்கள். அதையும் மீறி இன்று நண்பகலிலேயே பிகில் திரைப்படத்தை தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் முழுமையாக லீக் செய்துவிட்டதாக செய்திகள் கிளம்பின.

பெரிய பட்ஜெட் படங்களை குறி வைத்து அடிப்பதை தமிழ் ராக்கர்ஸும் வாடிக்கையாகவே வைத்திருக்கிறது. இதனால் சினிமா தயாரிப்பாளர்கள் தரப்பு படும் அவஸ்தைகளைப் பற்றி கவலைப்படுவதில்லை. அவ்வப்போது இணையதள முகவரியை மாற்றிக்கொண்டு தமிழ் ராக்கர்ஸ் இதுபோன்ற திருட்டை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

அதேசமயம், என்னதான் தமிழ் ராக்கர்ஸ் லீக் செய்தாலும் ரசிகர்களையும், ஃபேமிலி ஆடியன்ஸையும் கவரும் படங்கள் வசூலை குவிக்கவே செய்கின்றன. பேட்ட, விஸ்வாசம், அசுரன், நம்ம வீட்டுப் பிள்ளை உள்ளிட்ட சில படங்கள் அதற்கு உதாரணம். எனவே தமிழ் ராக்கர்ஸின் திருட்டையும் மீறி பிகிலை விஜய் ரசிகர்கள் ஜெயிக்க வைப்பார்கள் என்றே திரையுலகம் நம்புகிறது.

மேலும் படிக்க : Bigil Full Movie in tamilrockers : பிகில் திரைப்படம் தமிழ்ராக்கர்ஸில் லீக்! அதிர்ச்சியில் படக்குழு

Actor Vijay Tamil Rockers
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment