‘பிகில்’, ’கைதி’ படங்களுக்கு வெள்ளிக்கிழமை மட்டும் சிறப்புக் காட்சிக்கு அனுமதி

Thalapathy Vijay – Karthi: விஜய்யின் ‘பிகில்’, கார்த்தியின் ‘கைதி’ ஆகியப் படங்களின் ரிலீஸ் குறித்த லைவ் அப்டேட்டுகளை இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள். 

Thalapathy vijay, thalapathy vijay movies, vijay dance hits, vijay songs, தளபதி விஜய், விஜய் பாடல்கள், விஜய் டான்ஸ்
Bigil Full Movie Download Tamilrockers, Bigil Tamil Movie, Bigil Tamil Movie Online Watch, பிகில், பிகில் ஃபுல் மூவி, தமிழ் ராக்கர்ஸ்

Bigil-Kaithi Release Updates:  கடந்த தீபாவளிக்கு நடிகர் விஜய்யின் சர்கார் வெளியாகியிருந்தது. இந்தப் படத்தைத் தொடர்ந்து ’பிகில்’ படத்தில் கமிட்டானார் விஜய். ’தெறி’, ‘மெர்சல்’ ஆகியப் படங்களைத் தொடர்ந்து நடிகர் விஜய்யுடன் – இயக்குநர் அட்லீ மூன்றாவது முறையாக இணைந்திருக்கிறார். இதனை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. பெண்கள் கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு, கதிர், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்திற்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான். இப்படம் தீபாவளி ஸ்பெஷலாக நாளை (அக்டோபர் 25) ரிலீஸாகிறது. சிறப்புக் காட்சிகள் திரையிடக் கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டதால், விஜய் ரசிகர்கள் பலரும் ஏமாற்றத்தில் இருந்த நிலையில், தமிழக அரசு பிகில், கைதி படங்களுக்கு வெள்ளிக்கிழமை மட்டும் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி அளித்துள்ளது.

விஜய்யின் அடுத்தப்படமான ’தளபதி 64’ படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இவர் தற்போது நடிகர் கார்த்தியை வைத்து ‘கைதி’ படத்தை இயக்கியுள்ளார். ஹீரோயின், பாடல்கள் என எதுவும் இல்லாஅத இப்படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் ‘அஞ்சாதே’ நரேன் நடித்துள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். ஒரே இரவில் நடக்கும் சம்பவத்தை மையப்படுத்தி ஆக்‌ஷன் திரில்லராக உருவாகியுள்ள கைதி படமும் தீபாவளி விருந்தாக வரும் வெள்ளிக்கிழமை திரைக்கு வருகிறது.

Live Blog

Thalapathy Vijay’s Bigil, Karthi’s Kaithi Release Updates: தளபதி விஜய்யின் ‘பிகில்’, கார்த்தியின் ‘கைதி’ ஆகியப் படங்களின் ரிலீஸ் குறித்த லைவ் அப்டேட்டுகளை இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள். 


14:38 (IST)24 Oct 2019

கேரளாவில் விஜய் வைப்ரேஷன்

வெறித்தனமாக போஸ்டர் ஒட்டும் கேரள விஜய் ரசிகர்

14:29 (IST)24 Oct 2019

வெறித்தனம்

விஜய் ரசிகர்களுக்காக காமன் டிபி 

14:17 (IST)24 Oct 2019

அட்லீ ஆன்சர்

இன்று மாலை 6 மணிக்கு பிகில் சம்பந்தமான அனைத்து கேள்விகளுக்கும் ட்விட்டரில் பதிலளிக்கிறார் அட்லீ. 

13:52 (IST)24 Oct 2019

பிகில் போஸ்டர்

தமிழகத்தை அலங்கரிக்கும் பிகில் போஸ்டர்கள்

13:10 (IST)24 Oct 2019

இலங்கையில்…

இலங்கையில் மாஸ் காட்டும் விஜய் ரசிகர்கள்


 

12:57 (IST)24 Oct 2019

ஹவுஸ் ஃபுல் காட்சிகள்

வெள்ளி முதல் திங்கள் வரை சென்னையில் அனைத்துக் காட்சிகளும் பிகில் படத்திற்கு புக் செய்யப்பட்டிருக்கின்றன. 

12:40 (IST)24 Oct 2019

சிறப்புக்காட்சி இல்லை

சிறப்புக் காட்சிகளை ரத்து செய்யக் கூறி அறிக்கை அனுப்பப்பட்டுவிட்டது. முன்பதிவு செய்தவர்களுக்கு பணத்தை திருப்பி வழங்க வலியுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிக கட்டணம் வசூலிப்பது கட்டுப்படுத்தப்படும்”, என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

12:26 (IST)24 Oct 2019

கார்த்தியை பற்றி நரேன்

“படத்தில் கார்த்திக்கு ஹீரோயின் கிடையாது. எனக்குத் தெரிஞ்சு ஒரு பெரிய கமர்ஷியல் படத்தில ஹிரோயினே இல்லாத படம் இது தான். கார்த்திக்கு நிறைய தைரியம் வேணும் இப்படி படம் பண்ண. கார்த்தி ரொம்ப தெளிவா இருக்கார். என்ன பண்றோம்கிறது அவருக்கு தெரிஞ்சுருக்கு. அவருக்கு ஒரு எமோஷனல் பக்கம் இருக்கும் அதில சூப்பரா ஃபெர்ஃபார்ம் பண்ணிருக்காரு. ரசிகர்களுக்கு கண்டிப்பா பிடிக்கும்” எனக் கூறியுள்ளார் நரேன் 

12:14 (IST)24 Oct 2019

எனக்கு 250 போதும்

தளபதி விஜய்யின் பிரமாண்ட படமான பிகில் திரைக்கு வருவதால், கைதி படத்திற்கான திரையரங்கு கிடைக்குமா? என்று தயாரிப்பாளரிடம் கேட்டதற்கு, ‘எனக்கு தேவையான திரையரங்கு கிடைத்துவிட்டது, இந்த படம் 250 தியேட்டர்ல வந்தாலே போதும், நான் எதிர்ப்பார்த்த தியேட்டர் கிடைத்துவிட்டது’ என்று பதில் அளித்துள்ளார்.

12:11 (IST)24 Oct 2019

‘சேம் ஃபீலிங்’ டூட்

‘எல்லாரும் என் கிட்ட பிகில் டிக்கெட் கேக்குறாங்க. என்ன சொல்றது’ என்ற அர்த்தத்தில் வடிவேலுவின் படத்தைப் பகிர்ந்திருந்தார் பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜ். அதற்கு ‘சேம் ஃபீலிங்’ என கமெண்ட் செய்திருக்கிறார் பிகில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி. 

11:57 (IST)24 Oct 2019

பிகில் இவ்வவு வசூலிக்க வேண்டும்

பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணி பிகில் தமிழகத்தில் மட்டுமே ரூ 200 கோடி வசூல் செய்தாக வேண்டும். அப்போது தான் ரூ 150 கோடி நெட் வந்து, வரி அனைத்தும் போக எல்லோருக்குமான லாபமான படமாக அமையும் என கூறியுள்ளார். 

11:46 (IST)24 Oct 2019

சி.எம் விஜய்

மதுரை மாவட்ட விஜய் ரசிகர் மன்ற பொறுப்பாளர் தங்கபாண்டியன் ஒட்டியுள்ள போஸ்டரில் ”சி.எம். ஆஃப் தமிழ்நாடு” என்ற வாசகத்தை அச்சடித்து அதில் விஜய் படமும் போடப்பட்டுள்ளது. இதனிடையே பிகில் படத்தில் விஜய் கதாபாத்திரத்தின் பெயர் கேப்டன் மைக்கேல் அதனை சுருக்கி சி.எம்.என போட்டதாக விஜய் ரசிகர் மன்றத் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

11:40 (IST)24 Oct 2019

மாஸான விஜய்!

பிகில் படத்தின் ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணு, தனது ஒர்க்கிங் ஸ்டில்லை ட்விட்டரில் ப்ரொஃபைல் பிக்சராக வைத்துள்ளார். அதில் கூலர்ஸ்ன் அணிந்துக் கொண்டு, விஷ்ணுவின் தோளில் சாய்ந்தபடி மானிடரை பார்த்துக் கொண்டிருக்கிறார் மைக்கேல் கெட்டப்பில் இருக்கும் விஜய். 

11:32 (IST)24 Oct 2019

வெறித்தனம்

விஜய் மீது அளவு கடந்த அன்பு கொண்டிருக்கும் ரசிகர்கள், பிகில் வெற்றிக்காக மண் சோறு சாப்பிடுவது உள்ளிட்ட பல்வேறு செயல்களை செய்து வருகின்றனர். இந்நிலையில், ரத்தம் வடிய வடிய முதுகில் கொக்கி மாட்டிக் கொண்டு அந்தரத்தில் தொங்குகிறார்கள். இந்த வீடியோவை காயத்ரி ரகுராம் ட்விட்டரில் வெளியிட்டு விஜய் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். “நானும் விஜய் சாருக்கு பெரிய ரசிகை தான். விஜய் ரசிகர்கள் தயவு செய்து உங்களை நீங்களே காயப்படுத்திக்கொள்ளாதீர்கள். உங்கள் அன்பை காட்ட வேண்டும் என்றால் படத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் பாருங்கள், இப்படி செய்யாதீர்கள்” என கேட்டுக்கொண்டுள்ளார்.

11:16 (IST)24 Oct 2019

பிகிலுடன் மோதும் கைதி

பிகிலுடன் ஒன்றாக கைதி ரிலீஸாகிறதே என்ற கேள்விக்கு, “பிகில் ஒரு பெரிய படம். அந்த படத்திற்கு சிங்கத்துக்கு கிடைக்கும் பங்கு போல் நிறைய தியேட்டர்கள் கிடைக்கும். அதேசமயம் கைதிக்கும் நிறைய தியேட்டர்கள் கிடைக்கும். பேட்டயும், விஸ்வாசமும் ஒரே நாளில் வெளியாகும் போது, பிகிலும் கைதியும் ஏன் ஒரே நாளில் ரிலீசாகக்கூடாது” எனக் கேள்வி எழுப்பியுள்ளார் கார்த்தி 

11:00 (IST)24 Oct 2019

கார்த்தியின் கைதி

கார்த்தியின் திரை வாழ்க்கையில் முக்கியமான படங்களுள் கைதியும் ஒன்று. 

10:45 (IST)24 Oct 2019

ஒருவழியா டிக்கெட் வாங்கிட்டேன்

பிகில் முதல்நாள் முதல் காட்சிக்கு டிக்கெட் புக் செய்துவிட்டதாக நடிகை யாஷிகா ஆனந்த் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

10:40 (IST)24 Oct 2019

3 விஜய் உறுதி

நாளை முதல் பிகில் தீபாவளி, ராயப்பன், மைக்கேல், பிகில் உங்களுடன் இணைந்து இதனைக் கொண்டாட காத்திருக்கிறார்கள். புள்ளிங்கோ ரெடியா என ட்விட்டரில் பதிவிட்டுள்ளது ஏ.ஜி.எஸ் நிறுவனம். இதன் மூலம் படத்தில் 3 கதாபாத்திரங்களில் விஜய் நடித்திருப்பது உறுதியாகியுள்ளது. 

10:31 (IST)24 Oct 2019

விஜய்க்கு ஆதரவாக சீமான்

பிகில் சிறப்புக்காட்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கும் நிலையில்,  ”நடிகர் விஜய் பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசியதற்கு வன்மம் வைத்துக் கொண்டு தான் தமிழக அரசு பழிவாங்குகிறது. விஜய் பேசிய கருத்துக்கு எதிர் கருத்துக்களை பலரும் தெரிவித்து விட்டார்கள். அதன் பின்னரும் பழிவாங்கும் நோக்கத்தோடு படத்துக்கு இடையூறு செய்வது நன்றாக இருக்காது. இதனால் இன்றைய தலைமுறையினருக்கு ஜனநாயகத்தின் மீது வெறுப்பு உண்டாகி விடும். செல்வாக்கு பெற்ற கலைஞர்கள் சொல்வது சமூகத்தில் எடுத்துக்கொள்ளப்படுகிறது இதனால் அதிகாரத்தினர், அவர்களுக்கு எதிராக எதிர்வினையாற்றுகிறார்கள். அச்சுறுத்த பார்க்கிறார்கள். இதற்கெல்லாம் நடிகர் விஜய் அஞ்சக்கூடாது” என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 

Bigil-Kaithi Release Update: கில்லிக்கு பிறகு ஸ்போர்ட்ஸ் சம்பந்தமான பிகில் படத்தில் விஜய் நடித்திருக்கிறார். நீண்ட காலத்திற்குப் பிறகு மைதானத்தில் மனநிலையை செலுத்தி இருக்கிறார் விஜய். அதோடு இந்தப் படத்தில் மூன்று பாத்திரங்களில் அவர் நடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. அவற்றை அட்லீ எவ்வாறு வித்தியாசப்படுத்தி காட்டியிருக்கிறார் என்பதை கவனிக்க விரும்புகிறவர்கள் இந்தப் படத்தை பார்த்தே ஆக வேண்டும். அதோடு வில்லு படத்திற்கு பிறகு விஜய்யும் நயன்தாராவும் ஜோடி சேர்ந்திருக்கிறார்கள்.

தீரன் படத்திற்குப் பிறகு கார்த்தி நடித்திருக்கும் ஆக்‌ஷன் த்ரில்லர் படம் தான் கைதி. ஒரே இரவில் நடக்கும் கதை என்பதால், இதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. ஹீரோயின், பாடல் இல்லாமல், கதை எவ்வாறு சுவாரஸ்யமாக நகருகிறது என்பதை தெரிந்துக் கொள்ளவும், ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bigil kaithi diwali release thalapathy vijay karthi

Next Story
அடிக்கடி ட்ரோல்ல சிக்குறாங்களே: ப்ரைஸ் டேக்குடன் துப்பட்டா அணிந்த ஜான்வி கபூர்!Janhvi Kapoor
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com